[X] Close
JUST IN
  • BREAKING-NEWS டெல்லியில் காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல் காந்தியுடன் மஜத கட்சி தலைவர் குமாரசாமி சந்திப்பு
  • BREAKING-NEWS பெண் பத்திரிகையாளர்கள் குறித்து அவதூறாக கருத்து பதிவிட்ட வழக்கில் நடிகர் எஸ்.வி.சேகர் ஜூலை 5ஆம் தேதி நேரில் ஆஜராக கரூர் நீதிமன்றம் உத்தரவு
  • BREAKING-NEWS யாருக்கும் பெரும்பான்மை இல்லாததால் மீண்டும் தேர்தல் நடத்த வேண்டும் - அமித்ஷா
  • BREAKING-NEWS இரட்டை இலை சின்னம் தொடர்பான வழக்கின் விசாரணையை ஜூலை 4க்கு ஒத்திவைத்தது டெல்லி உயர்நீதிமன்றம்
  • BREAKING-NEWS ஜெயலலிதா மரணம் தொடர்பாக மே 25ஆம் தேதி விசாரணைக்கு ஆஜராக ஐ.ஜி.பொன்.மாணிக்கவேலுக்கு ஆறுமுகசாமி விசாரணை ஆணையம் சம்மன்
  • BREAKING-NEWS அறிவாலயத்தை தலைமை செயலகமாக நினைத்துக் கொண்டு ஸ்டாலின் கற்பனையில் இருக்கிறார் : அமைச்சர் ஜெயக்குமார்
  • BREAKING-NEWS வெப்பச்சலனம் காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மழை பெய்ய வாய்ப்பு

போக்குவரத்துத் துறை நிர்வாக சீரமைப்பு: திமுக கோரிக்கை சாத்தியமில்லாதது

dmk-demand-is-unlikely

போக்குவரத்து துறை நிர்வாகத்தை சீரமைப்பது தொடர்பாக திமுக அளித்துள்ள அறிக்கையின் அம்சங்களை நடைமுறையில் செயல்படுத்த வாய்ப்பில்லை என இந்திய நுகர்வோர் கூட்டமைப்பு கூறுகிறது.

போக்குவரத்து துறை நஷ்டத்தில் இயங்கி வருவதால் அதனை மீட்கும் வகையில் கடந்த மாதம் பேருந்து கட்டணத்தை உயர்த்தியது தமிழக அரசு. பேருந்து கட்டண உயர்வை கண்டித்து திமுக, உள்ளிட்ட எதிர் கட்சிகள் போராட்டங்களை நடத்திவரும் நிலையில், துறையை சீரமைக்க சில பரிந்துரைகளை திமுக சார்பில் முதல்வரிடம் வழங்கினார் ஸ்டாலின். ஆனால் அறிக்கையில் குறிப்பிட்டிருக்கும் பல அம்சங்களை நடைமுறையில் செயல்படுத்த வாய்ப்பில்லை என கூறுகிறது இந்திய நுகர்வோர் கூட்டமைப்பு.

திமுக அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது போன்று பேருந்து கூடு கட்டுவது அரசுக்கு சாத்தியமில்லாத ஒன்று என்றும், உதிரி பாகங்களை ஏற்கனவே ஆய்வு செய்து தான் அரசு வாங்கி வருவதாகவும் கூறுகிறார்கள் போக்குவரத்து ஆலோசகர்கள். மாணவர்களுக்கு வழங்கும் இலவச பேருந்து கட்டண மானிய தொகையை காலதாமதம் இல்லாமல் வழங்குவது, பட்ஜெட்டில் நிதி ஒதுக்குவது என்ற கொள்கை முடிவுகளை அரசு எடுப்பது தமிழக அரசின் காலத்தின் கட்டாயமாக இருக்கிறது என்கிறார்கள்.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close