[X] Close
JUST IN
  • BREAKING-NEWS பேருந்து கட்டண உயர்வுக்கு டீசல் விலை உயர்வை காரணம் காட்டுவதை ஏற்க முடியாது- வைகோ
  • BREAKING-NEWS பேருந்து கண்டன உயர்வை கண்டித்து தமிழகத்தில் ஜன.24இல் விசிக சார்பில் ஆர்ப்பாட்டம்
  • BREAKING-NEWS பேருந்து கட்டண உயர்வுக்கு எதிராக ஜன.27 இல் திமுக நடத்தும் ஆர்ப்பாட்டத்தில் மதிமுக பங்கேற்கும்
  • BREAKING-NEWS பேருந்து கட்டண உயர்வை எதிர்த்து ஜன.24 ஆம் தேதி பாஜக போராட்டம் நடத்தும்-தமிழிசை
  • BREAKING-NEWS ஜன. 12 இல் ஒத்திவைக்கப்பட்ட அண்ணா பல்கலைக்கழகத் தேர்வு நாளை மறுநாள் நடைபெறும்
  • BREAKING-NEWS 2ஜி விவகாரத்தில் ஆ.ராசா எழுதிய ‘தி 2ஜி சாகா அன்ஃபோல்ட்ஸ்’ என்ற புத்தகம் டெல்லியில் வெளியீடு
  • BREAKING-NEWS பேருந்து கட்டணத்தை உயர்த்தியது தமிழக அரசு; நாளை முதல் அமலுக்கு வருகிறது
தமிழ்நாடு 06 Jan, 2018 08:10 AM

சென்னையில் தமிழர்களின் பாரம்பரியத்தை நினைவூட்டும் கண்காட்சி

tamil-traditional-exhibition-at-chennai

தமிழர்களின் பாரம்பரியத்தை பறைசாற்றும் விதமாக இயற்கை விவசாய உணவுப் பொருட்கள் மற்றும் கால்நடைகள் குறித்த கண்காட்சி சென்னையில் இன்றும் நாளையும் நடைபெறுகிறது.

இயற்கையை விட்டு விலகிவரும் தமிழர்களுக்கு விழிப்புணர்வு அளிக்கும் வகையில் செம்புலம் என்ற அமைப்பு விவசாய உணவுப் பொருட்கள் மற்றும் கால்நடைகள் குறித்த கண்காட்சியை சென்னை பெருங்குடியில் ஏற்பாடு செய்துள்ளது. இன்றும் நாளையும் நடைபெறும் இந்தக் கண்காட்சிக்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இதில் 30 வகையான தமிழக கால்நடை இனங்கள் காட்சிப்படுத்தப்படவுள்ளன. கலப்பு இல்லாத ஆடு, மாடு, கோழி, நாய், வாத்து என பல்வேறு கால்நடைகள் காட்சிப்படுத்தப்படவுள்ளன. பாரம்பரிய உணவு வகைகளை மக்கள் அறிந்துகொள்ளும் வகையில் ஏராளமான கடைகளும் அமைக்கப்படவுள்ளன. மேலும், இயற்கை விவசாயம், கால்நடை வளர்ப்பு குறித்து அவை சார்ந்த வல்லுநர்கள் உரையாற்றுகின்றனர்.

பாரம்பரிய விளையாட்டுகளும், கரகம், சிலம்பம் உள்ளிட்ட தமிழர்களின் கலைகளும், இந்தக் கண்காட்சியில் அரங்கேற்றப்படுகின்றன. தமிழர்களின் பண்பாடு, பாரம்பரியம் ஆகியவை குறித்து அறிந்துகொள்ளும் வகையில் நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.

வீடியோ

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close