[X] Close
JUST IN
 • BREAKING-NEWS வடகிழக்கு மாநிலமான மேகாலயாவில் நிலநடுக்கம்- ரிக்டர் அளவில் 4.7 ஆக பதிவு
 • BREAKING-NEWS மேட்டூர் அணைக்கு நீர்வரத்து விநாடிக்கு 2,815 கனஅடியில் இருந்து 2,375 கன அடியாக குறைந்தது
 • BREAKING-NEWS காணாமல் போன மீனவர்களை மீட்கக்கோரி நாகையில் கடலில் இறங்கி பெண்கள் போராட்டம்
 • BREAKING-NEWS இலங்கைக்கு படகில் கடத்தப்படவிருந்த ரூ.75 லட்சம் கஞ்சா ராமேஸ்வரம் அருகே பறிமுதல்
 • BREAKING-NEWS ஜம்மு காஷ்மீர்: பாரமுல்லா பகுதியில் பாதுகாப்பு படையினரால் 2 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை
 • BREAKING-NEWS உலக ஹாக்கி லீக் தொடரில் வெண்கலம் வென்றது இந்திய அணி
 • BREAKING-NEWS ஆர்.கே.நகர் தேர்தல் நடத்தும் அலுவலராக பிரவீன்நாயர் பொறுப்பேற்றுக்கொண்டார்
 • BREAKING-NEWS ஆர்.கே.நகர் தேர்தல் தொடர்பாக முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர்கள், ஆலோசனை
 • BREAKING-NEWS நாகையில் 2ஆவது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மீனவ மக்களுடன் அமைச்சர் ஓ.எஸ் மணியன் பேச்சு
 • BREAKING-NEWS தமிழும் தமிழ் நாடும் என் மனதுக்கு நெருக்கமான ஒன்று - வெங்கய்ய நாயுடு
 • BREAKING-NEWS தோல்வி பயம் காரணமாகவே ஆர்.கே.நகர் இடைத்தேர்தலை ரத்து செய்ய கோருகிறது பாஜக- டிடிவி
 • BREAKING-NEWS நாகை நம்பியார் நகர் சமுதாய கூடத்தில் 2 ஆவது நாளாக மீனவர்கள் காத்திருப்பு போராட்டம்
 • BREAKING-NEWS மேட்டூர் அணைக்கு நீர்வரத்து விநாடிக்கு 3,602 கனஅடியில் இருந்து 2,815 கனஅடியாக குறைந்தது
 • BREAKING-NEWS குற்றாலத்தில் நீர்வரத்து குறைந்ததால் சுற்றுலாப் பயணிகள் குளிக்க அனுமதி
தமிழ்நாடு 04 Dec, 2017 05:57 PM

காங். தலைவர் பதவியேற்கவுள்ள ராகுல் காந்திக்கு ஸ்டாலின் வாழ்த்து

dmk-s-mkstalin-sends-his-wishes-to-rahul-gandhi-and-highlights-why-he-would-be-a-beacon-of-hope-for-the-country-as-congress-president

காங்கிரஸ் கட்சியின் தலைவராக மனுத்தாக்கல் செய்திருக்கும் ராகுல் காந்திக்கு ட்விட்டர் பக்கத்தில் வீடியோ மூலம் திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

காங்கிரஸ் கட்சியின் அதிகாரப்பூர்வமான ட்விட்டர் பக்கத்தில் திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் வீடியோ பதிவு வெளியாகியுள்ளது. அதில் அவர், “தனித்துவம் மிக்க காங்கிரஸ் பாரம்பரியத்தை யாராலும் மறுத்திட இயலாது. அந்த இயக்கத்தின் தற்போதையை வயது 132. காங்கிரஸ் நம் நாட்டின் பழம்பெரும் அரசியல் கட்சி. அத்தகைய கட்சியின் தலைமையை தேர்ந்தெடுக்கும் தருணம் அக்கட்சிக்கு மட்டுமின்றி நமது தேசத்திற்கும் முக்கியமான கட்டமாகும். காங்கிரஸ் பேரியக்கத்தின் தலைவர் பொறுப்புக்கு ராகுல் காந்தியின் பெயர் முன்மொழியப்படுவது வரலாற்றுடன் இணைந்த சிறப்பும் முக்கியத்துவம் வாய்ந்ததாகும்”

“இந்திய மக்களுக்கான இணையில்லா பணியில் தங்களை முழுவதுமாக அற்பணித்து கொள்ளும் அவரது குடும்பத்தின் நீண்ட நெடிய வரலாற்றின் தொடர்ச்சியாக ராகுல் காந்தி முன்மொழியப்பட்டுள்ளார். வகுப்புவாத மற்றும் சர்வாதிகார எண்ணம் கொண்ட சக்திகள் இந்த நாட்டை ஆக்கிரமிக்க முயற்சிக்கும் இந்த வேளையில் நம்பிக்கை ஒளியாக ராகுல் காந்தி திகழ்கிறார். காங்கிரஸ் தலைவர் பொறுப்புக்கு அவர் தேர்ந்தெடுக்கப்பட்டு, அவர் மாபெரும் வெற்றி பெற வேண்டும் என்று திராவிட முன்னேற்ற கழகத்தின் சார்பிலும், தலைவர் கலைஞர் சார்பிலும் மனமார்ந்த வாழ்த்துகளை தெரிவித்து கொள்கிறேன்”.

“ஜனநாயகம், மதச்சார்பின்மை, சோஷலிஸம் என்னும் மகத்தான லட்சியங்களை மீட்டெடுக்கும் போராட்டத்தில் ராகுல் காந்தி திறம்பட பணியாற்ற வேண்டும். காங்கிரஸ் தலைவராக வேட்புமனு தாக்கல் செய்ய இருக்கும் ராகுல் காந்திக்கு என் நல்வாழ்த்துகளை மகிழ்ச்சியோடு தெரிவித்து கொள்கிறேன்” என்று ஸ்டாலின் பேசியுள்ளார்.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close