[X] Close
JUST IN
  • BREAKING-NEWS மக்களவையில் குடியுரிமை சட்டத்திருத்த மசோதாவின் நகலை இந்திய மஜ்லிஸ்-ஈ-இத்ஹதுல் முஸ்லிமன் கட்சி தலைவர் அசாதுதீன் ஓவைசி கிழித்ததால் பரபரப்பு
  • BREAKING-NEWS குடியுரிமை திருத்த மசோதாவுக்கு தேசியவாத காங்கிரஸ், தெலங்கானா ராஷ்டிர சமிதி, பகுஜன் சமாஜ், சமாஜ்வாடி கட்சிகள் எதிர்ப்பு
  • BREAKING-NEWS குடியுரிமை திருத்த மசோதாவில் இலங்கை சிறுபான்மையினரையும் சேருங்கள் - பிரசன்னா ஆச்சார்யா, பிஜூ ஜனதாதளம் எம்.பி
  • BREAKING-NEWS குடியுரிமை சட்டத்தில் திருத்தம் கொண்டு வரும் மசோதாவிற்கு தெலங்கானா ராஷ்டிரிய சமிதி கட்சி எதிர்ப்பு
  • BREAKING-NEWS 2009 மக்களவை தேர்தல் வெற்றிக்கு எதிரான வழக்கு: ப.சிதம்பரம் ஆஜராக மேலும் ஒரு மாதம் அவகாசம்
  • BREAKING-NEWS நித்யானந்தா எங்கிருக்கிறார்? - டிச. 12க்குள் கர்நாடக அரசு மற்றும் காவல்துறை அறிக்கை அளிக்க அம்மாநில உயர்நீதிமன்றம் உத்தரவு
  • BREAKING-NEWS மக்களவையில் ஆயுதச் சட்டத்திருத்த மசோதா நிறைவேற்றப்பட்டது

திருவாரூரில் ஓ.என்.ஜி.சி.க்கு எதிராக கடையடைப்பு போராட்டம்

protest-against-ongc-in-thiruvarur

திருவாரூர் மாவட்டம் நன்னிலம் அருகேயுள்ள தென்னஞ்சாறு கிராமத்தில் செயல்படும் ஓ.என்.ஜி.சி எண்ணெய் துரப்பன கிணறுக்கு எதிராக கடையடைப்பு போராட்டம் தொடங்கியுள்ளது.

நன்னிலம் அருகேயுள்ள தென்னஞ்சாறு கிராமத்தில் 1000 ஏக்கர் விளைநிலத்திற்கு மத்தியில், ஓ.என்.ஜி.சி நிறுவனம் எண்ணெய் துரப்பன கிணறு அமைத்துள்ளதாகவும், அது குறித்து விவசாயிகளிடம் எவ்வித கருத்தும் கேட்கவில்லை என்றும் குற்றஞ்சாட்டப்படுகிறது. விளைநிலத்திற்கு மத்தியில், ஓ.என்.ஜி.சி கிணறு செயல்படுவதால் விளைச்சல் பாதிப்பிற்குள்ளாகியுள்ளதாக கூறி விவசாயிகள் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

விவசாயிகளுக்கு ஆதரவாக, தண்ணாநல்லூர், மாப்பிள்ளைக்குப்பம், ஆண்டிபந்தல், நன்னிலம் உள்ளிட்ட 8 கிராமங்களில் வணிகர்கள் கடையடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். வாடகை போக்குவரத்து வாகனங்களும் இன்று இயக்கப்படவில்லை. ஓ.என்.ஜி.சி.க்கு ஆதரவாக காவல்துறையினர் செயல்படுவதாகவும் புகார் எழுந்துள்ளது.

வீடியோ

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close