தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடத்த அவசரச் சட்டம் பிறப்பிக்க வேண்டும் என்று, முதலமைச்சர் ஜெயலலிதா பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார்.
தமிழக மக்களின் உணர்வுகளை மதித்து மத்திய அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என அக்கடிதத்தில் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.
ஜல்லிக்கட்டு தமிழர்களின் பாரம்பரிய பெருமையாகும் என்று குறிப்பிட்டுள்ள முதலமைச்சர், இந்த விஷயத்தில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பிரதமரை கேட்டுக் கொண்டுள்ளார்.
பொங்கல் பண்டிகையை ஒட்டி, தமிழகம் முழுவதும் கிராமப் புறங்களில் ஜல்லிக்கட்டு நடத்துவதற்கான முன்னேற்பாடுகள் செய்யப்பட்டிருப்பதாக தெரிவித்துள்ள ஜெயலலிதா, இதனை நடத்துவதற்கு ஏதுவாக ஏற்கனவே வலியுறுத்தியபடி அவசரச் சட்டம் பிறப்பிக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்துள்ளார்.