[X] Close
JUST IN
  • BREAKING-NEWS பேருந்து கட்டணத்தை உயர்த்தியது தமிழக அரசு; நாளை முதல் அமலுக்கு வருகிறது
  • BREAKING-NEWS மூத்த குடிமக்கள், 8 வயதுக்கு கீழ் உள்ளவர்களுக்கு பாஸ்போர்ட் கட்டணம் 10% குறைக்கப்படும் - சுஷ்மா ஸ்வராஜ்
  • BREAKING-NEWS டெல்லியில் சுஷ்மா ஸ்வராஜை புரட்சித்தலைவி அம்மா என்று அழைத்து மகிழ்வேன் - புதுச்சேரி முதலமைச்சர்
  • BREAKING-NEWS பெண்களுக்கான அம்மா இருசக்கர வாகன திட்டத்தில் வாகனம் பெறுவதற்கு விண்ணப்பிக்க ஆதார் அவசியம் - அரசு
  • BREAKING-NEWS மாணவர் சரத்பிரபுவின் இறப்புக்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் - அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன்
  • BREAKING-NEWS மத்திய அரசின் ஸ்மார்ட் சிட்டி பட்டியலில் ஈரோடு சேர்ப்பு
  • BREAKING-NEWS ஆண்டாள் விவகாரத்தில் கவிஞர் வைரமுத்து மீதான வழக்குகளை விசாரிக்க இடைக்காலத்தடை - உயர்நீதிமன்றம்
தமிழ்நாடு 15 Nov, 2017 09:06 AM

கோடநாடு எஸ்டேட் மேலாளரிடம் கிடுக்குப்பிடி விசாரணை

it-raid-with-kodanad-estate-manager

கோவை வருமான வரித்துறை அலு‌வலகத்தில், கோடநாடு எஸ்டேட் மேலாளர் நடராஜனிடம் நேற்றிரவு சுமார் இரண்டரை மணி நேரம் கிடுக்குப்பிடி விசாரணை நடைபெற்றது.

கடந்த ஒரு வாரமாக வருமான வரித்துறையினர் தமிழகம் முழுவதும் சசிகலா மற்றும் அவரது உறவினர் வீடுகள், அலுவலகம் என பல்வேறு இடங்களில் சோதனை நடத்தி வந்தனர். கடந்த 6 நாட்களாக கோடநாடு எஸ்டேட்டிலும் சோதனை நடத்திய வருமான வரித்துறை அதிகாரிகள் அங்கு ஏராளமான ஆவணங்களை கைப்பற்றினர். இந்த ஆவணங்கள் தொடர்பாக கோடநாடு எஸ்டேட் மேலாளர் நடராஜனிடம் நேற்றிரவு அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர்.

கோவை வருமான வரித்துறை அலுவலகத்தில் சுமார் இரண்டரை மணி நேரம் இந்த விசாரணை நடைபெற்றது. அப்போது வருமான வரித்துறை அதிகாரிகளின் கேள்விகளுக்கு நடராஜன் முறையாக பதிலளித்தார் என கூறப்படுகிறது. இந்த விசாரணைக்கு பின், மீண்டும் வரும் 16 ஆம் தேதி கோவை வருமான வரித்துறை அலுவலகத்தில் ஆஜராகுமாறு நடராஜனுக்கு வருமான வரித்துறை அதிகாரிகள் உத்தரவிட்டனர்.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close