[X] Close
JUST IN
  • BREAKING-NEWS மேகதாது அணைக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழக அரசு தொடுத்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கை நாளை விசாரிக்கிறது உச்சநீதிமன்றம்
  • BREAKING-NEWS தெலங்கானா சட்டப்பேரவை தேர்தலில் வெற்றிபெற்ற சந்திரசேகர ராவுக்கு சந்திரபாபு நாயுடு ட்விட்டரில் வாழ்த்து
  • BREAKING-NEWS சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.72.82 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.68.26 காசுகளாகவும் விலை நிர்ணயம்
  • BREAKING-NEWS டெல்லியில் கூடிய எதிர்க்கட்சித்தலைவர்கள், குடியரசுத் தலைவரை சந்திக்க முடிவு
  • BREAKING-NEWS 2019 மக்களவை தேர்தல் தொடர்பாக டெல்லியில் எதிர்க்கட்சிகளின் ஆலோசனை கூட்டம் தொடங்கியது
  • BREAKING-NEWS தேர்வு அறிவிப்பாணை முறையாக இல்லாததால் உடற்கல்வி சிறப்பாசிரியர் பணிக்குத் தேர்வானோர் பட்டியலை ரத்து செய்து உயர்நீதிமன்ற கிளை உத்தரவு
  • BREAKING-NEWS தமிழகத்தின் இசைவின்றி காவிரியில் அணை கட்டக்கூடாது என கர்நாடகாவுக்கு மத்திய அரசு உத்தரவிடக் கோரும் தீர்மானம் தமிழக சட்டப்பேரவையில் ஒருமனதாக நிறைவேற்றம்

ஜெயா டிவி அலுவலகத்தில் வருமானவரி சோதனை

income-tax-raid-in-jaya-tv-office

சென்னையில் உள்ள ஜெயா டிவி அலுவலகத்தில் வருமான வரித்துறை அதிகாரியினர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

சென்னை ஈக்காட்டுத்தாங்கலில் ஜெயா டிவி அலுவலகம் உள்ளது. இங்கு அதிகாலையிலிருந்து வருமான வரித்துறையினர் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். தாம்பரத்தில் இருந்து வந்துள்ள 10 பேர் கொண்ட வருமான வரித்துறை குழு இந்த சோதனையில் ஈடுபட்டுள்ளது. வருமான வரித்துறையினரின் சோதனையை ஜெயா டிவி நிறுவனமும் உறுதி செய்துள்ளது. ஜெயா தொலைக்காட்சியுடன் தொடர்புடைய மற்ற இடங்களிலும் சோதனை நடைபெற வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

வருமானம் குறித்து முறையான தகவல் தெரிவிக்கப்படவில்லை என்பதால் இந்த சோதனை நடைபெற்று வருவதாக முதற்கட்ட தகவல் தெரிவிக்கின்றன. மொத்தமாக எத்தனை இடங்களில் இந்த சோதனை நடைபெறுகிறது. சோதனைக்கான காரணம் என்ன என்பது குறித்த விவரங்கள் சோதனையின்  முடிவுக்கு பிறகே தெரிய வரும். பெங்களூரு சிறையில் சசிகலாவை டிடிவி தினகரன் நேற்று சந்தித்த நிலையில் இன்று இந்த சோதனை நடைபெற்று வருகிறது. இருப்பினும் இந்த சந்திப்புக்கும், வருமான வரி சோதனைக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்றும் கூறப்படுகிறது.

வீடியோ

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close