புதுச்சேரியில் இன்று மாலை நடைபெறவிருந்த மே 17 இயக்கத்தின் கூட்டத்திற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
புதுச்சேரி புதிய பேருந்துநிலையம் அருகே மே 17 இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி தலைமையில் இன்று மாலை மே 17 இயக்கத்தின் கூட்டம்
நடைபெறவிருந்தது. இந்நிலையில் இந்த கூட்டத்திற்கு புதுச்சேரி காவல்துறை அனுமதி மறுத்துள்ளது. சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்பட வாய்ப்புள்ளதால் அனுமதி
மறுக்கப்பட்டதாக புதுச்சேரி காவல்துறை சார்பில் விளக்கம் கொடுக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே மெரினா கடற்கரையில் தமிழ் இயக்கங்கள் சார்பில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்ச்சியை தடையை மீறி நடத்த முயன்றதாக மே பதினேழு
இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி கடந்த சில மாதங்களுக்கு முன் கைது செய்யப்பட்டார். இதைத்தொடர்ந்து திருமுருகன் காந்தி உள்பட 4 பேர் மீது
குண்டர் சட்டம் பாய்ந்தது. ஆனால் அவர்கள் மீதான குண்டர் சட்டத்தை சென்னை உயர் நீதிமன்றம் ரத்து செய்ததையடுத்து 4 பேரும் சிறையில் இருந்து
விடுவிக்கப்பட்டனர்.
தீபக் மிஸ்ராவை நீக்கக் கோரிய எதிர்க்கட்சிகளின் கோரிக்கை நிராகரிப்பு
காவிரி விவகாரம்: திமுக கூட்டணி இன்று மனிதச் சங்கிலி
மனைவி சேர்ந்து வாழ மறுப்பு: மாமனாரை கத்தியால் குத்திக் கொன்ற மருமகன்
ஓடும் ரயிலில் சிறுமிக்கு பாலியல் தொல்லை: பாஜக பிரமுகர் கைது
ஊடகங்களுக்கு மசாலா தருவது போல் பேசாதீர்கள் : பாஜகவினருக்கு மோடி அறிவுரை
மறக்க முடியுமா ஷார்ஜா ஆட்டத்தை ! சச்சினின் கிளாஸான இன்னிங்ஸ்
அதிகரித்த ஏடிஎம் பணத் தட்டுப்பாடு.. பதுக்கலா..? ஒரு பார்வை..!
நாடாளுமன்றம், சட்டசபைக்கு ஒரே நேரத்தில் தேர்தல்: கருத்து கேட்கும் ஆணையம்
11 ஆண்டுகளுக்கு தங்கத்தின் விலை ஏறிக்கொண்டேதான் இருக்கும்: எக்ஸ்பெர்ட் டிப்ஸ்
தீண்டாமைக்கு சம்மட்டி அடி ! தலித் பக்தரை தோளில் சுமந்துச் சென்ற அர்ச்சகர்