[X] Close
JUST IN
  • BREAKING-NEWS தமிழகம், புதுச்சேரியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலையால் 3 நாட்களுக்கு மழை பெய்யும் - சென்னை வானிலை ஆய்வு மையம்
  • BREAKING-NEWS தமிழகத்தில் 3 இடங்களில் ஹைட்ரோகார்பன் எடுக்க இன்று மாலை ஒப்பந்தம் கையெழுத்தாகிறது டெல்லி தனியார் ஓட்டலில் ஓஎன்ஜிசி நிறுவனத்துக்கு அனுமதி வழங்குகிறார் அமைச்சர் தர்மேந்திர பிரதான்
  • BREAKING-NEWS தமிழ் உள்ளிட்ட அனைத்து பிராந்திய மொழிகளிலும் அஞ்சல் துறை தேர்வுகள் நடத்தப்படும் - மாநிலங்களவையில் ரவிசங்கர் பிரசாத் அறிவிப்பு
  • BREAKING-NEWS அறிமுகமானது முறைப்படுத்தப்பட்ட வாடகைத் தாய் மசோதா
  • BREAKING-NEWS தனியார் மருத்துவமனைக்கு ராஜகோபாலை மாற்ற நீதிமன்றம் அனுமதி

புதுக்கோட்டை மாவட்டத்திலும் ஒரு கீழடி?

there-is-keezhadi-in-pudukottai-dist-also

கீழடியைப் போன்று பண்டைத் தமிழரின் நாகரிகத்தை பறைசாற்றும் பொக்கிஷங்கள் புதுக்கோட்டை மாவட்டத்தில் புதைந்து கிடப்பதாக நம்பப்படுகிறது. அங்கு கிடைத்துள்ள சில பொருட்களே இதற்கு உதாரணம் என்று கூறுகின்றனர் வரலாற்று ஆய்வாளர்கள்.

புதுக்கோட்டை மாவட்டம் மங்களநாடு, பாலகிருஷ்ணபுரம், மாத்தூர் மனக்காடு ஆகிய கிராமங்களுக்கு மத்தியில் ஓடும் வில்லுன்னி ஆற்றங்கரையில் 173 ஏக்கர் பரப்பளவில் அம்பலத்திடல் என்ற பகுதி உள்ளது. இங்கு 15 ஆண்டுகளுக்கு முன், கால்நடைகளை மேய்க்கச் சென்ற சிலர், முதுமக்கள் தாழிகள், பண்டைக்கால மண் பாண்டங்கள் போன்றவற்றைப் பார்த்துள்ளனர். இப்பகுதியில் தொல்லியல்துறை ஆய்வு மேற்கொள்ள வேண்டும் என்று அந்தப்பகுதி மக்கள் அப்போது விடுத்த கோரிக்கை கண்டு கொள்ளப்படவில்லை எனக் கூறப்படுகிறது.

இருப்பினும், புதுக்கோட்டை தொல்லியல் ஆய்வுக்கழகம் என்ற தனியார் அமைப்பு அங்கு ஆய்வு நடத்தியதில், மேலும் சில தொன்மையானப் பொருட்கள் கிடைத்ததாகத் தெரிகிறது. 3 ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய தமிழர்களின் வாழ்வியல் முறை, கலாச்சாரம் போன்றவை பற்றி அறிய அம்பல‌த்திடல் பகுதியில் ஆய்வு நடத்த வேண்டும் என்பது மக்களின் வேண்டுகோள்.

வீடியோ

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close