[X] Close
JUST IN
  • BREAKING-NEWS காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மத்திய அரசை வலியுறுத்த வேண்டும்- ஸ்டாலின்
  • BREAKING-NEWS காவிரி விவகாரம் தொடர்பாக முதலமைச்சர் தலைமையில் அனைத்துக்கட்சிக் கூட்டம் தொடங்கியது
  • BREAKING-NEWS பஞ்சாப் நேஷனல் வங்கி மோசடியில் ஈடுபட்ட நிரவ் மோடியின் 9 சொகுசு கார்கள் பறிமுதல்
  • BREAKING-NEWS ஐயா நல்லகண்ணுவை சந்தித்தேன்; அவரை சந்தித்ததற்கான காரணம் அவரின் பெயரிலேயே உள்ளது- கமல்ஹாசன்
  • BREAKING-NEWS அரசியல் பிரவேசம் குறித்து விஜயகாந்திடம் பேசியபோது ‘நீங்களெல்லாம் வரணும்’ என கூறினார்- கமல்ஹாசன்
  • BREAKING-NEWS அரசியல் பயணத்தை கருணாநிதியிடம் சொன்னேன்; சிரிப்பு மூலம் வாழ்த்துகிறார் என்பதை புரிந்து கொண்டேன்- கமல்ஹாசன்
  • BREAKING-NEWS கமல்ஹாசனை ஆசிர்வாதம் செய்து அனுப்பிய விஜயகாந்த் தேர்தல் நேரத்தில் அவருடன் கூட்டணி குறித்து முடிவெடுப்பார் - பிரேமலதா விஜயகாந்த்

ஓ.என்.ஜி.சி எண்ணெய் கிணறு அருகே தீ விபத்து!

pudukottai-people-protest-again-ongc

புதுக்கோட்டையில் உள்ள ஓ.என்.ஜி.சி எண்ணெய் கிணறு அருகே பயங்கர தீவிபத்து ஏற்பட்டது. 

புதுக்கோட்டை மாவட்டம் நல்லாண்டார் கொல்லை ஓ.என்.ஜி.சி எண்ணெய் கிணறு அருகே ஏற்பட்ட தீவிபத்து அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து கரம்பக்குடி மற்றும் கீரமங்கலம் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டது. தகவலையடுத்து ஒருமணிநேரம் கழித்து வந்த தீயணைப்புத் துறையினர் தற்காலிகமாக தீயை அணைத்துள்ளனர். இந்த சம்பவம் குறித்து புகார் அளிக்கப்பட்டும், வருவாய்த்துறை அதிகாரிகள் யாரும் வரவில்லை என்பதால் ஆத்திரமடைந்த அப்பகுதி பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். 

இதையடுத்து போராட்டம் நடைபெற்ற இடத்திற்கு வந்து பேச்சுவார்த்தை நடத்திய கரம்பக்குடி வட்டாட்சியரை பொதுமக்கள் சிறைபிடித்தனர். இதனால் போராட்டத்தில் ஈடுபட்ட மக்களுடன் மாவட்ட ஆட்சியர் சமாதானப் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளார். ஆனால் ஓ.என்.ஜி.சி ஆழ்துளை கிணற்றை அகற்றும் வரை போராட்டம் நடத்துவோம் என்று அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.
 

வீடியோ

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close