[X] Close
JUST IN
  • BREAKING-NEWS வவ்வால்களால் நிஃபா வைரஸ் வரவில்லை- ஆய்வு முடிவில் விளக்கம்
  • BREAKING-NEWS முதலமைச்சர் உத்தரவின்படி ஆலைக்கான மின்சாரம், குடிநீர் இணைப்புகள் துண்டிப்பு: தூத்துக்குடி ஆட்சியர் சந்தீப் நந்தூரி
  • BREAKING-NEWS சிபிஎஸ்இ 12ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியீடு
  • BREAKING-NEWS ஸ்டெர்லைட் ஆலையை நிர்வகிக்கும் வேதாந்தா குழும நிறுவனங்களை லண்டன் பங்குச்சந்தையிலிருந்து விலக்கிவைக்க வேண்டும் - பிரிட்டன் எதிர்க்கட்சி
  • BREAKING-NEWS தமிழகத்தை தனது கட்டுப்பாட்டில் கொண்டு வர பிரதமர் மோடி சதித்திட்டம் தீட்டுகிறார் - திருமாவளவன்
  • BREAKING-NEWS உத்வேகம், அர்ப்பணிப்புடன் மத்திய பாஜக அரசு 5ஆவது ஆண்டில் தொடர்ந்து செயல்படும் - பிரதமர் மோடி
  • BREAKING-NEWS தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவத்தை கண்டித்து மே 28ஆம் தேதி தேமுதிக சார்பில் அனைத்து மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் கண்டன ஆர்ப்பாட்டம் - விஜயகாந்த்

டெங்கு அறிகுறிகள் என்ன? தடுக்கும் வழிகள் என்ன?

what-are-the-symptoms-of-dengue-what-are-the-ways-to-prevent

தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் வேகமாகப் பரவி வருகிறது. அதைத் தடுக்கும் வகையில் சுகாதாரத்துறை சார்பில் டெங்கு காய்ச்சல் விழிப்புணர்வு முகாம் பல மாவட்டங்களில் நடத்தப்பட்டு வருகிறது.

அறிகுறிகள் என்ன?

தலைவலி,கண் பின்புற வலி, பொதுவான உடல் வலி,தசை வலி, மூட்டு வலி, குமட்டலும் வாந்தியும் வயிற்றுக்கடுப்பு, தோல் சினைப்பு,  அடி முட்டிகளில் பொதுவாகவும், சிலருக்கு உடல் முழுதுமே அரிப்பு ஏற்படலாம், பசியின்மை, தொண்டைப்புண், பல் ஈறுகளிலிருந்து குருதி வடிதல், மூக்கிலிருந்து குருதி வடிதல், மாதவிடாய் மிகைப்பு, சிறுநீரில் குருதி போதல், நிணநீர்க்கணு வீக்கம் வெள்ளை அணுக்கள் எண்ணிக்கைக் குறைதல்

என்ன செய்யலாம்? 

* முதலில் எந்தக் காய்ச்சலாக இருந்தாலும் உடனடியாக மருத்துவரை அணுகவேண்டும். சாதாரண காய்ச்சல்தானே என்று இருக்கக்கூடாது.

* காய்ச்சலுடன்  தலைவலி, வயிற்றுவலி, வாந்தி, உடல்சோர்வு, கருப்பு நிறத்தில் மலம் சிக்கல்போன்ற அறிகுறிகள் இருப்பின் உடனடியாக      அரசு மருத்துவமனையை அணுகுவது நல்லது.

*காய்ச்சல் இருக்கும் பொழுது உடலில் தேவையான தண்ணீர் சத்து இருக்க வேண்டும். ஜூஸ்கள் மற்றும் தண்ணீர் குடித்து உடலில் நீர்ச்சத்து குறையாமல் பாதுகாத்துக்கொள்ள வேண்டும்.

* குழந்தைகள் சோர்வடையாமல் இருக்க 1 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு நாளொன்றுக்கு நான்கு கிளாஸ் அளவு நீர்ச்சத்தும் 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு நாளொன்றுக்கு 5 முதல் 6 டம்ளர் அளவு நீர்ச்சத்தும் கொடுக்க வேண்டும். இதை மருத்துவரின் அறிவுரையின் பேரில் வழங்க வேண்டும்.

*காய்ச்சல் உள்ளவர்கள் தேவையான அளவு சிறுநீர் கழிவதை உறுதி செய்ய வேண்டும்.

காய்ச்சலைத் தடுக்கும் முறைகள் என்ன?

* வீட்டைச் சுற்றி தண்ணீர் தேங்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.

* கொசுக்கடியிலிருந்து பாதுகாத்துக்கொள்ள கொசுவலைகளைப் பயன்படுத்த வேண்டும்.

* குழந்தைகள் உறங்கும் பொழுதும் வெளியில் விளையாடசெல்லும் பொழுதும் முழுகால் சட்டை மற்றும் முழு கைசட்டை அணிய செய்ய வேண்டும்.

* மாலை நேரங்களில் முக்கியமாக 4 மணி முதல் 7 மணி வரை வீட்டின் ஜன்னல் மற்றும் கதவுகளை மூடி வைக்கவும் அல்லது ஸ்க்ரீனைப் பயன்படுத்தவும்.

* மாலை நேரங்களில் நொச்சித் தழை மூலம் மூட்டம் போட்டு அப்புகையை வீட்டில் பரப்பலாம்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close