[X] Close
JUST IN
  • BREAKING-NEWS போராட்டம் தொடர்பாக தூத்துக்குடி பொதுமக்கள் யாரும் அச்சப்பட வேண்டாம்- டிஜிபி ராஜேந்திரன்
  • BREAKING-NEWS வனத்துறையின் விழிப்புணர்வு எச்சரிக்கையை பொருட்படுத்தாமல் குரங்கணிக்கு ட்ரெக்கிங் சென்றனர்- அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன்
  • BREAKING-NEWS கோவையில் நிபா வைரஸ் காய்ச்சல் குறித்து பொதுமக்கள் யாரும் பீதி அடைய வேண்டாம்- டீன் அசோகன்
  • BREAKING-NEWS தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரும் போராட்டத்தில் பொதுமக்கள்- காவல்துறை இடையே மோதல்
  • BREAKING-NEWS "பா.ஜ.க. தோற்க பிரார்த்தனை செய்யுங்கள்": பாதிரியார்களுக்கு டெல்லி பேராயர் கடிதம்
  • BREAKING-NEWS டெல்லியில் காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல் காந்தியுடன் மஜத கட்சி தலைவர் குமாரசாமி சந்திப்பு
  • BREAKING-NEWS பெண் பத்திரிகையாளர்கள் குறித்து அவதூறாக கருத்து பதிவிட்ட வழக்கில் நடிகர் எஸ்.வி.சேகர் ஜூலை 5ஆம் தேதி நேரில் ஆஜராக கரூர் நீதிமன்றம் உத்தரவு

நீட் தேர்வுக்கு எதிராக மாணவிகள் போராட்டம்: 3 மாணவர்கள் மீது வழக்குப்பதிவு

chennai-nungambakkam-school-girls-protest-against-neet-3-arrested

நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்களிக்கக்கோரி சென்னை நுங்கம்பாக்கத்தில் அரசு பள்ளி மாணவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

சென்னை நுங்கம்பாக்கம் நெடுஞ்சாலையில் மறியலில் ஈடுபட்ட மாணவிகள், அனிதாவின் மர‌ணத்திற்கு நீதி வழங்கப்பட வேண்டும் என முழக்கமிட்டனர். காவல்துறை உயர் அதிகாரிகள் மாணவிகளுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டதை அடுத்து அவர்கள் கலைந்து சென்றனர்.

இந்நிலையில் மாணவிகளின் போராட்டத்திற்கு ஆதரவளித்த கல்லூரி மாணவர்களை போலீஸார் கைது செய்ததால், பள்ளி வாயில் முன் திரண்ட மாணவர்கள் மீண்டும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். கைதான மாணவர்களை விடுவிக்கும்வரை போராட்டம் தொடரும் என அவர்கள் தெரிவித்தனர். மேலும் கைது செய்யப்பட்ட 3 மாணவர்கள் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close