[X] Close
JUST IN
  • BREAKING-NEWS களத்தில் இறங்கியபோது உறுதியளித்தபடி தமிழகத்தில் திமுக கூட்டணி வெற்றி பெற்றுள்ளது; திமுகவின் வெற்றிக்கு உழைத்த தொண்டர்களுக்கு நன்றி -மு.க. ஸ்டாலின்
  • BREAKING-NEWS நாடாளுமன்ற தேர்தல் முடிவுகள் இன்று வெளிவந்துள்ளது; இரண்டு தேர்தல்களிலும் நாம் எதிர்பார்த்த பெரிய வெற்றியை பெற்று தந்துள்ள மக்களுக்கு நன்றி - ஸ்டாலின்
  • BREAKING-NEWS பிரதமர் மோடிக்கு வாழ்த்துகள்; மோடி அரசு ஜனநாயக கொள்கைகளை காக்கும் என நம்புகிறேன் - மு.க.ஸ்டாலின்
  • BREAKING-NEWS கர்நாடக எம்எல்ஏக்கள், அமைச்சர்களுடன் நாளை முதல்வர் குமாரசாமி ஆலோசனை
  • BREAKING-NEWS ஈரோடு மக்களவை தொகுதி மதிமுக வேட்பாளர் கணேச மூர்த்தி 2,10,618 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி
  • BREAKING-NEWS ட்விட்டரில் இருந்து தான் காவலாளி நீக்கப்பட்டுள்ளது; என் மனதளவில் காவலாளியாகவே இருக்கிறேன் - தனது ட்விட்டர் பக்கத்தில் சவுகிதார் (காவலாளி) என இருந்ததை நீக்கியதற்கு பிரதமர் மோடி விளக்கம்
  • BREAKING-NEWS தஞ்சை மக்களவை தொகுதியில் திமுக வேட்பாளர் பழனிமாணிக்கம், தமாகாவின் என்.ஆர்.நடராஜனை 3,63,047 வாக்கு வித்தியாசத்தில் தோற்கடித்தார்

கீழடியில் அருங்காட்சியகம்: மத்திய அமைச்சர் உறுதி

keeladi-excavation-will-continue

கீழடியில் அகழாய்வுப் பணிகளை தொடரவும், அருங்காட்சியகம் அமைக்கவும் மத்திய அரசு ‌முழு ஒத்துழைப்பு வழங்கும் என மத்திய சுற்றுலா மற்றும் கலை பண்பாட்டுத்துறை அமைச்சர் மகேஷ் சர்மா தெரிவித்துள்ளார்.

மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் சாமி தரிசனம் செய்தபின் செய்தியாளர்களை சந்தித்த அவர் மீனாட்சியம்மன் கோயிலின் பாதுகாப்பு மற்றும் பிற வசதிகளை மேம்படுத்துவது, பழமையை பாதுகாப்பது போன்ற நடவடிக்கைகள் எடுக்கப்படும் என அமைச்சர் மகேஷ் சர்மா உறுதியளித்தார்.

‌கீழடி அகழாய்வு குறித்த செய்தியாளர்களின் கேள்விக்கு பதில் அளித்த அவர், அங்கு அகழாய்வு நடத்தவும், அரு‌ங்காட்சியகம் அமைக்கவும் மத்திய அரசு தேவையான நடவடிக்கைகளை எடுத்து வருவதாகவும் அதற்கான முழு ஒத்துழைப்பும் மாநில அரசுக்கு வழங்கப்படும் என்றும் கூறினார். கொடைக்கானல் போன்ற சுற்றுலாத் தல‌ங்களில் போக்குவரத்து பிரச்னையை சீர் செய்வதற்கான நடவடிக்கைகளும் எடுக்கப்படும் என அமைச்சர் மகேஷ் சர்மா தெரிவித்தார்.
 

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close