[X] Close
JUST IN
  • BREAKING-NEWS 22 ஆம் தேதி கல்லணையில் இருந்து பாசனத்திற்காக தண்ணீர் திறக்கப்படும்- அமைச்சர் துரைக்கண்ணு
  • BREAKING-NEWS நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு எதிரான வாக்கெடுப்பு மாலை 6 மணிக்கு நடைபெறும்
  • BREAKING-NEWS புதிய தலைமுறை செய்தி எதிரொலி: கிருஷ்ணகிரி கே.ஆர்.பி அணை நீர்தேக்க பகுதியில் அனுமதியின்றி மணல் அள்ளிய 2 மினி லாரிகள் பறிமுதல்
  • BREAKING-NEWS புதுக்கோட்டையில் ஆளுநர் ஆய்வுக்கு எதிராக கருப்புக்கொடி போராட்டத்தில் ஈடுபட்ட திமுகவினர் கைது
  • BREAKING-NEWS குமரி: பெருஞ்சாணி அணையில் உபரி நீர் திறப்பால் தாமிரபரணி ஆற்றில் வெள்ள அபாய எச்சரிக்கை
  • BREAKING-NEWS தமிழகத்திற்கான முன்னேற்ற திட்டங்களை ரஜினி ஆதரிக்கிறார்; அதற்கு நன்றி- தமிழிசை
  • BREAKING-NEWS டீசல் விலை உயர்வு, சுங்க கட்டணம் உயர்வை குறைக்கக்கோரி நாடு முழுவதும் அகில இந்திய மோட்டார் காங்கிரஸ் சார்பில் லாரிகள் வேலைநிறுத்தம்

திவ்யபாரதிக்கு இரோம் ஷர்மிளா ஆதரவு

irom-sharmila-supports-divya-bharathi

கக்கூஸ் ஆவணப்பட இயக்குனர் திவ்யபாரதிக்கு தான் தொடர்ந்து ஆதரவளிக்க உள்ளதாக மனித உரிமை ஆர்வலர் இரோம் ஷர்மிளா கூறியுள்ளார்.

மதுரையில் கருத்தரங்கு ஒன்றில் பங்கேற்ற அவர் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்தார். அப்போது, “வன்முறை மற்றும் அடிமைத்தனத்திற்கு எதிராக தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறேன். அம்பேத்கரின் சட்டத்தை அமுல்படுத்த வேண்டும். குறிப்பாக மனிதனே மனிதக் கழிவுகளை அகற்றுவதற்கு எதிரான சட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும்” என்று கூறினார்.

மேலும், “கக்கூஸ் ஆவணப்படத்தில் இந்த நடைமுறை இருப்பதை சுட்டிக்காட்டிய திவ்யபாரதி மீது நடவடிக்கைகள் எடுத்து இருப்பது வேதனை அளிக்கிறது. திவ்யபாரதிக்கு தொடர்ந்து நான் ஆதரவு அளிப்பேன். கக்கூஸ் ஆவணப்படம் சாதாரண மக்களின் வாழ்க்கையை எடுத்துக் காட்டுகிறது. சாதீய கட்டமைப்புகள் முழுமையாக அகற்றப்பட வேண்டும்” என்று இரோம் ஷர்மிளா கூறினார்.

அதோடு, தனது திருமணம் ஆகஸ்ட் 16 ஆம் தேதி கொடைக்கானலில் நடைபெறும் எனவும் அவர் கூறினார்.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close