முகநூல் நட்பால் ஏற்பட்ட நெருக்கத்தால் சென்னையைச் சேர்ந்த கல்லூரி மாணவி ஒருவர் தன் முகத்தை இழந்துள்ளார்.
சென்னை கொளத்தூரைச் சேர்ந்த இளம்பெண், தனியார் கல்லூரி ஒன்றில் பி.எஸ்.சி 2ஆம் ஆண்டு பயின்று வந்துள்ளார். முகநூலில் அவருடைய பதிவுகளைப் பாராட்டி முரளி என்ற நாராயணன் கருத்து பதிவிட்டு வந்திருக்கிறார். அதனால், கல்லூரி மாணவிக்கும் முரளிக்கும் நட்பு ஏற்பட்டுள்ளது. அதனையடுத்து செல்போன் எண்களை பரிமாறிக்கொண்ட இருவரும், காதலிக்க தொடங்கியுள்ளனர். இந்த நிலையில், திருமணம் செய்துக்கொள்ளலாம் என முரளி கூறியிருக்கிறார். அதனை நம்பி, அவருடன் கடந்த 30ஆம் தேதி கல்லூரி மாணவி வீட்டை விட்டு வெளியேறி இருக்கிறார். இருவரும் கார் மூலமாக பெங்களூரு செல்லத் திட்டமிட்டிருக்கின்றனர். ஆனால், கடலூர் மாவட்டம், பண்ருட்டி அருகே செல்லும் போது சாலையோரத்தில் இருந்த கோயிலில் வைத்து கல்லூரி மாணவியை முரளி திருமணம் செய்திருக்கிறார்.
திடீரென அருகிலிருந்த முந்திரி தோப்பிற்கு மாணவியை அழைத்துச்சென்ற முரளி, குடும்பத்தினர் பிரித்துவிடுவார்கள் என்பதால் தற்கொலை செய்துக்கொள்ளலாம் என கூறியுள்ளார். அதற்கு, மாணவி ஒப்புக்கொண்ட நிலையில், அவர் தலையில் மட்டும் பெட்ரோல் ஊற்றி தீ வைத்து விட்டு, முரளி அங்கிருந்து தப்பிவிட்டார். மாணவியின் அலறல் சப்தம் கேட்டு அங்கம்பக்கத்தினர் அவரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். தலை,முகம் முழுவதும் எரிந்த நிலையிலிருந்த மாணவிக்கு கடலூர் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது. தொடர்ந்து, பெற்றோருடன் மாணவி பாதுகாப்பாக அனுப்பி வைக்கப்பட்டார். மேலும், தப்பியோடிய முரளி என்கிற நாராயணனை கண்டுப்பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.
அந்த நபர் எப்படி இருப்பார் என்பது தெரியாத நிலையில் முரளியை கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம் என காவல்துறையினர் தேடி வருகின்றனர். இணையதள குற்றங்கள் குறித்து எத்தனையோ விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்திய பிறகும் இது போன்ற சம்பவங்கள் தொடர்வதாகக் கூறும் காவல்துறையினர், பெற்றோரும், பிள்ளைகளின் இணைய செயல்பாடுகள் குறித்து கண்காணிக்க வேண்டும் என வலியுறுத்துகின்றனர்.
சந்திரயான்-3 திட்டத்தை செயல்படுத்த கூடுதலாக ரூ.75 கோடி கேட்கும் இஸ்ரோ..!
“சிந்தனைச் சிரிப்பைக் கேட்டேன்”- ப.சிதம்பரத்தை சந்தித்த வைரமுத்து ட்வீட்
“உள்ளாட்சித் தேர்தலில் யாருக்கும் ரஜினி ஆதரவில்லை”- ரஜினி மக்கள் மன்றம் அறிக்கை..!
டெல்லியில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் 35 பேர் உயிரிழப்பு
வெங்காயத்தை தொடர்ந்து உச்சத்தில் முருங்கை விலை..!
கைகொடுத்த ஃபேஸ்புக்: 12 ஆண்டுகளுக்குப் பின் குடும்பத்தினருடன் இணைந்த சிறுமி..!
தனி மனிதராக கிராமத்தை உயர்த்தும் சுப்பிரமணி வாத்தியார்..! தந்தையாகவே கொண்டாடும் ஊர்மக்கள்..!
தெலங்கானா என்கவுன்ட்டர்: போலீசாருக்கு வாழ்த்து தெரிவித்து அஜித் ரசிகர்கள் போஸ்டர்..!
நாடாளுமன்றத்தில் வேலை! விண்ணப்பிக்க ரெடியா..?