[X] Close
JUST IN
  • BREAKING-NEWS இனி வியாழக்கிழமை தோறும் டெங்கு ஒழிப்பு தினம் - சுகாதாரத்துறை
  • BREAKING-NEWS மழையால் புதுக்கோட்டை மாவட்ட பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவிப்பு
  • BREAKING-NEWS பாகிஸ்தானுக்கு இனி இந்திய தண்ணீர் கிடையாது: ஹரியானா தேர்தல் பரப்புரையில் பிரதமர் மோடி திட்டவட்டம்
  • BREAKING-NEWS உச்சநீதிமன்றத்தில் நடைபெற்று வரும் அயோத்தி வழக்கின் விசாரணை இன்றுடன் நிறைவு
  • BREAKING-NEWS கீழடியில் 5-ம் கட்ட ஆய்வுக்காக தோண்டப்பட்ட 54 குழிகள் இன்று மூடப்படுகின்றன
  • BREAKING-NEWS டாக்டர் எம்.ஜி.ஆர் நிகர்நிலை பல்கலைக்கழகம் சார்பில் முதல்வர் பழனிசாமிக்கு அக்டோபர் 20ம் தேதி கௌரவ டாக்டர் பட்டம் வழங்கப்படுகிறது

பிரதமரிடம் அரசியல் பேசவில்லை: முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி

edappaddi-palanisamy-meets-narendhra-modi

பிரதமர் மோடியிடம் அரசியல் ரீதியாக எதுவும் பேசவில்லை என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடியை அவரது இல்லத்தில் சந்தித்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசியபோது அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் கூறுகையில், இலங்கை சிறையில் உள்ள தமிழக மீனவர்களை விடுவிப்பது குறித்து பிரதமரிடம் பேசியதாக கூறினார். மத்திய அரசின் திட்டங்களுக்கான ரூ.17 ஆயிரம் கோடி நிதியைத் தர பிரதமரிடம் கோரிக்கை விடுக்கப்பட்டதாகவும் முதலமைச்சர் தெரிவித்தார். அதேபோல, எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவில் கலந்துகொள்ளவும், சட்டப்பேரவையில் முன்னால் முதலமைச்சர் ஜெயலலிதாவின் படத்தினை திறக்கவும் பிரதமரிடம் கோரிக்கை விடுத்ததாகவும் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார். தமிழக அரசு செயல்படுத்தி வரும் குடிமராமத்துப் பணிகளுக்கு மத்திய அரசு சார்பில் ரூ.500 கோடி மானியம் வழங்கவும், காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்கவும் பிரதமரிடம் வலியுறுத்தியதாகவும் முதலமைச்சர் தெரிவித்தார். தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க ஒப்புதல் அளிக்கவும், கேரள அரசு தடுப்பணைகள் கட்டிவருவதைத் தடுக்கவும் பிரதமரிடம் கோரிக்கை வைக்கப்பட்டதாகவும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார். இதேபோல, நீட் தேர்விலிருந்து தமிழகத்துக்கு விலக்களிக்கவும், வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளுக்கு பயிர்க்காப்பீட்டு தொகையினை உடனடியாக வழங்கவும் பிரதமர் மோடியிடன் வலியுறுத்தப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close