[X] Close
JUST IN
  • BREAKING-NEWS பாட்னா உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக இருக்கும் அம்ரேஷ்வர் பிரதாப் சாஹியை சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக நியமிக்க கொலிஜியம் பரிந்துரை
  • BREAKING-NEWS ஐரோப்பிய ஒன்றியத்துடன் புதிய பிரெக்ஸிட் உடன்பாடு ஏற்பட்டது - பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன்
  • BREAKING-NEWS ப.சிதம்பரத்தை அவதிக்குள்ளாக்க வேண்டும் என்பதே அமலாக்கத்துறையின் எண்ணம் - கபில் சிபல்
  • BREAKING-NEWS நீட் தேர்வு ஆள்மாறாட்ட வழக்கில் கைதான மாணவர் உதித் சூர்யாவுக்கு நிபந்தனை ஜாமீன்
  • BREAKING-NEWS அடுத்த 5 நாட்களுக்கு கனமழை நீடிக்கும் - இந்திய வானிலை ஆய்வு மையம்

பஸ் ஸ்டிரைக்: கண்ணாடிகள் உடைப்பு, பயணிகள் அவதி

bus-strike

போக்குவரத்து ஊழியர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளதால் பயணிகள் கடும் தவிப்புக்கு ஆளாகியுள்ளனர்.

13வது ஓய்வூதிய ஒப்பந்தத்தை ஏற்படுத்துவது, ஓய்வுபெற்ற தொழிலாளர்களின் நிலுவைத் தொகையை கணக்கிட்டு வழங்குவது என்பது உள்ளிட்ட 7 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி போக்குவரத்து தொழிலாளர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தை அறிவித்துள்ளனர். இதன் காரணமாக இன்று பெரும்பாலான பேருந்துகள் இயக்கப்படவில்லை. இதனால் பொதுமக்கள் பெரும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.
அதிகாலையிலேயே வெளியூரிலிருந்து சென்னை கோயம்பேடு வந்த பயணிகள், தங்களது வீடுகளுக்கு செல்ல முடியாமல் தவித்தனர். ஆட்டோக்கள் இயக்கப்பட்டாலும் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுவதாக பயணிகள் புகார் தெரிவித்துள்ளனர்.

மாற்று ஏற்பாடுகள் மூலம் ஒரு சில பகுதிகளுக்கு மட்டும் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. பூந்தமல்லி- தாம்பரம் வழித்தடத்தில் மிகவும் குறைவான அளவில் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. புறநகர் பகுதிகளைச் சேர்ந்த தனியார் பேருந்துகள், மினி பேருந்துகள் சென்னைக்கு இயக்கப்படுகின்றன. ‌அதே நேரத்தில் அண்ணாநகர், போரூர், ஓட்டேரி உள்ளிட்ட இடங்களில் இயக்கப்பட்ட பேருந்துகளின் கண்ணாடிகள் உடைக்கப்பட்டுள்ளன.

Advertisement:
Related Tags : Bus strike
Advertisement:
Advertisement:
[X] Close