[X] Close
JUST IN
தமிழ்நாடு 18 Mar, 2017 10:58 AM

சொந்த தொகுதி செல்லும் முதலமைச்சர் பழனிசாமி

முதலமைச்சர் பழனிசாமி தனது சொந்த தொகுதியான சேலம் மாவட்டம் எடப்பாடிக்கு இன்று செல்கிறார்.

கோவையில் கட்டப்பட்டுள்ள ஆட்சியர் அலுலவகக் கட்டடத்தை திறந்து வைப்பதற்காக முதலமைச்சர் பழனிசாமி இன்று கோவை செல்கிறார். இதனைத் திறந்து வைத்த பின் மேலும் சில புதிய கட்டடங்களை கோவையில் திறந்து வைக்கிறார். இதனைத்தொடர்ந்து, தனது சொந்த தொகுதியான சேலம் மாவட்டம் எடப்பாடி செல்லும் முதலமைச்சர், அங்கும் சில அரசு திட்டங்களைத் தொடங்கி வைக்க உள்ளார்.

இதையடுத்து மீண்டும் கோவை சென்று அங்கிருந்து விமானம் மூலம் சென்னை வருகிறார். இந்த மாதத்தில் மட்டும் மூன்றாவது முறையாக, தனது சொந்தமாவட்டமான சேலம் செல்கிறார் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி. தமிழக அமைச்சர்கள் அனைவரும் ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் பணியில் தீவிரமாக இருக்கும் நிலையில், பழனிசாமி வெளியூர் நிகழ்ச்சிகளில் தொடர்ந்து பங்கேற்று வருகிறார்.

இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close