[X] Close
JUST IN
 • BREAKING-NEWS பாகிஸ்தான்: லாகூரில் நடந்த குண்டு வெடிப்பில் 8பேர் உயிரிழப்பு - 30பேர் படுகாயம்
 • BREAKING-NEWS டெல்லி லோக் நாயக் பவனில் அரசு அலுவலக கட்டடத்தில் தீ விபத்து
 • BREAKING-NEWS இந்திய மகளிர் அணியைக் கௌரவிக்கும் பிசிசிஐ
 • BREAKING-NEWS குடியரசுத் தலைவர் பதவியேற்பு விழாவில் பங்கேற்க டெல்லி புறப்பட்டார் முதலமைச்சர் பழனிசாமி
 • BREAKING-NEWS பிசிசிஐ கூட்டத்தில் சீனிவாசன் பங்கேற்கக் கூடாது: உச்சநீதிமன்றம் உத்தரவு
 • BREAKING-NEWS டெல்லியில் குடியரசு துணைத் தலைவர் வேட்பாளர் வெங்கய்யாவுடன் ஓ.பன்னீர்செல்வம் சந்திப்பு
 • BREAKING-NEWS ஆப்கானிஸ்தானில் மருத்துவமனை மீது தலிபான் பயங்கரவாதிகள் தாக்குதல்- 35 பேர் உயிரிழப்பு
 • BREAKING-NEWS நாடாளுமன்ற வளாகத்தில் நாளை காங்கிரஸ் போராட்டம்: மல்லிகார்ஜூன் கார்கே
 • BREAKING-NEWS மாணவர்களுக்கு கல்லூரிகளில் டிரைவிங் லைசன்ஸ்!
 • BREAKING-NEWS அந்நிய செலாவணி மோசடி வழக்கில் டிடிவி தினகரன் மீதான குற்றச்சாட்டு பதிவு ரத்து
 • BREAKING-NEWS காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த 6 மக்களவை உறுப்பினர்கள் இடைநீக்கம்
 • BREAKING-NEWS கோவை ஈஷா யோகா மையத்தால் சுற்றுவட்டார பகுதிகளில் ஒலி மாசு: தமிழக அரசு
 • BREAKING-NEWS புதுச்சேரியில் அடுத்த ஆண்டு முதல் ஆன்லைனில் மருத்துவ கலந்தாய்வு: அமைச்சர்
 • BREAKING-NEWS மதுரையில் 2 நகைக் கடைகளின் பூட்டை உடைத்து 80 சவரன் நகை கொள்ளை
தமிழ்நாடு 17 Mar, 2017 09:14 AM

காலணி வீசப்பட்ட சம்பவம் ஏற்புடையது அல்ல: மு.க.ஸ்டாலின்

மத்திய இணையமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் மீது காலணி வீசப்பட்ட சம்பவம், தமிழர்கள் போற்றிப் பாதுகாத்து வரும் பண்புக்கு துளியும் ஏற்புடையது அல்ல என திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் படித்து வந்த முத்துக்கிருஷ்ணன் மரணத்துக்கு கட்சி சார்பற்ற முறையில் அனைத்துக் கட்சிகளும் தங்களது கண்டனத்தைப் பதிவு செய்து வருவதாக தெரிவித்துள்ளார்.

மாணவர் முத்துக்கிருஷ்ணன் மரணத்தால் சேலம் மாநகரம் மட்டுமின்றி தமிழக மாணவர் சமுதாயமே சோகத்தில் மூழ்கியிருப்பதாகக் குறிப்பிட்டுள்ள மு.க.ஸ்டாலின், சில சமூக விரோதிகள் இதுபோன்ற நிகழ்வுகளில் உட்புகுந்து, அரசியல் தலைவர்களைக் குறி வைப்பதையும், குறிப்பாக மத்திய இணையமைச்சர் மீது காலணி வீசி, தமிழகத்தின் பெருமையை சீர்குலைக்க முயற்சிப்பதை நாகரீக சமுதாயத்தில் இருக்கும் யாராலும் ஏற்றுக் கொள்ள முடியாது என கூறியுள்ளார்.

மாணவர் முத்துக்கிருஷ்ணனின் உடல் இறுதி அஞ்சலிக்காக வைக்கப்பட்ட இடத்தில் காவல்துறையினர் குவிக்கப்பட்டிருந்தும் இது போன்றதொரு சம்பவம் நடப்பதற்கு எப்படி அனுமதித்தார்கள் என்ற கேள்வி எழுப்பியுள்ள மு.க.ஸ்டாலின், தமிழக காவல்துறையின் திறமை மெல்ல மெல்ல சாகடிக்கப்படுகிறதோ என்ற அச்சம் ஏற்படுவதாகவும் தெரிவித்துள்ளார்.

எனவே, மத்திய இணை அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் மீது காலணி வீசியவர்கள் மீது, காவல்துறை கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், இனி இதுபோன்ற சம்பவம் தமிழகத்தில் நடக்காதவாறு தடுக்க வேண்டிய பொறுப்பும், கடமையும் டி.ஜி.பி.க்கு இருக்கிறது என்பதை தெரிவித்துக் கொள்ள விரும்புவதாகவும் அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

Advertisement:
Advertisement:
[X] Close