[X] Close
JUST IN
  • BREAKING-NEWS ராஜீவ்காந்தி கொலை குறித்து சீமான் பேசியது தொடர்பாக மாவட்ட தேர்தல் அதிகாரியிடம் விரிவான அறிக்கை கேட்டுள்ளார் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ
  • BREAKING-NEWS நீட் ஆள்மாறாட்ட வழக்கில் மாணவர் இர்பானின் காவலை அக்டோபர் 25 வரை நீட்டித்தது தேனி நீதிமன்றம்
  • BREAKING-NEWS நாளை முதல் காலவரையற்ற வேலைநிறுத்தம்: ஆவின் பால் டேங்கர் லாரி ஒப்பந்த உரிமையாளர்கள் அறிவிப்பு
  • BREAKING-NEWS இன்று முதல் 4 நாட்களுக்கு தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் அறிவிப்பு

ஹைட்ரோகார்பன் திட்டம் விவசாயத்தை அழித்துவிடும்: பாண்டிராஜ்

director-pandiraj-tell-about-hydrocarbon-project

மத்திய அரசு கொண்டுவர உள்ள ஹைட்ரோகார்பன் திட்டம் விவசாயத்தை அழித்துவிடும் என பிரபல இயக்குனரான பாண்டிராஜ் தெரிவித்துள்ளார்.

புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசலில் நடைபெற்ற உண்ணாவிரத போராட்டத்தில் கலந்து கொண்ட இயக்குனர் பாண்டிராஜ், ஹைட்ரோகார்பன் திட்டத்திற்கு தனது எதிர்ப்பை தெரிவித்துள்ளார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், நான் இங்கு ஒரு இயக்குனராக வரவில்லை. என்னுடைய சொந்த ஊர் புதுகோட்டை. அங்கு ஒரு பிரச்னை என்று வரும் போது அதற்காக நான் கண்டிப்பாக போராடுவேன் எனக் கூறினார். புதுகோட்டை மாவட்டம் வானம் பார்த்த கந்தக பூமி. இங்கு விவசாயம் செய்வது மிக சவாலான ஒன்று. அப்படிப்பட்ட விவசாயத்தை நம்பியிருக்கும் இடத்தில் மத்திய அரசு ஹைட்ரோகார்பன் திட்டத்தை கொண்டுவந்துள்ளது. விவசாயத்தை அழிக்கும் முயற்சியாகவே இந்த திட்டம் கருதப்படுகிறது என கூறினார்.

இந்த ஹைட்ரோகார்பன் திட்டத்தால் சுமார் 200 கிலோமீட்டர் தூரம் வரை வீரியம் இருக்கும் என கூறப்படுகிறது. பிற்காலத்தில் நானே இங்கு வந்துதான் விவசாயம் செய்யவேண்டிய நிலை வரலாம். அதற்காகவே நான் இங்கு நடைபெறும் போராட்டத்தில் கலந்து கொண்டுள்ளேன் என பாண்டிராஜ் தெரிவித்துள்ளார்.

பொதுமக்கள், இளைஞர்கள் ஜல்லிக்கட்டு பிரச்சனைக்காக போராடி அதனை வென்றது போன்று ஹைட்ரோகார்பன் திட்ட போராட்டத்தையும் வெற்றியடைய செய்வர் என்ற நம்பிக்கை உள்ளதாகவும் அவர் கூறினார்.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close