[X] Close
JUST IN
  • BREAKING-NEWS தேர்தல் விதிகளை மீறியதாக தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு
  • BREAKING-NEWS இடைத்தேர்தல் தேர்தலில் நாங்குநேரி - 66.10%, விக்கிரவாண்டி - 84.36% வாக்குப்பதிவு - தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ
  • BREAKING-NEWS தொடர் மழை காரணமாக நீலகிரி மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அறிவிப்பு - ஆட்சியர்
  • BREAKING-NEWS தீபாவளிக்கு மறுநாள் அக்.28ஆம் தேதி (திங்கள் கிழமை) அரசு விடுமுறை

சுயநலத்திற்காக அல்ல.. பினாமி ஆட்சியை அகற்றவே போராட்டம்... மு.க.ஸ்டாலின்

mk-stalin-speech-at-hunger-strike-portest

சுயநலத்திற்காக திமுக உண்ணாவிரதப் போராட்டத்தை நடத்தவில்லை என்றும், தமிழகத்தில் நடக்கும் பினாமி ஆட்சியை அகற்றவே போராட்டம் நடத்தப்படுவதாகவும் திமுக செயல்தலைவர் மு க ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

சட்டப்பேரவையில் ஜன‌நாயகப் படுகொலை நடைபெறுவதாகக் கூறி, அதனைக் கண்டித்து‌ திமுக சார்பில் மாநிலம் முழுவதும் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தப்பட்டது. திருச்சியில் நடைபெற்ற போராட்டத்தில் பங்கேற்றுப் பேசிய மு.க. ஸ்டாலின், வருங்கால சந்ததியினர் நலமுடன் வாழ தமிழகத்தைக் காப்பாற்ற வேண்டும் என்றும், தமிழகத்தைக் காப்பாற்றும் கடமை திமுகவுக்கு உண்டு என்றும் கூறினார். தோல்வியால் திமுக துவளவில்லை என்ற அவர், ஆட்சிக்கு வரமுடியாததால், துறவறம் பூண்டுவிடவில்லை என்றும் தெரிவித்தார்.

வெற்றி, தோல்வியைப் பற்றி கவலைப்படாமல், தமிழக மக்களின் நலனுக்காக பாடுபடுகிறது திமுக என்றும் அவர் கூறினார். கடந்த சட்டமன்றத் தேர்தலில், பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டுத்தான், தேர்தலில் அதிமுக வென்றது என்ற ஸ்டாலின், திமுக,‌ அதிமுக இடையேயான வாக்கு வித்தியாசம் 1.1 சதவிகிதம்தான் என்றும் குறிப்பிட்டார்.

சட்டமன்றத் தேர்தலில் அதிமுகவின் வெற்றி ஜெயலலிதாவிற்காகத்தான் என்று கூறிய அவர், ஜெயலலிதா முதலமைச்சராகத்தான் மக்கள் வாக்களித்தனர் என்றும் தெரிவித்தார். மக்கள் வாக்களித்தது பினாமி ஆட்சிக்கு அல்ல என்றும் ஸ்டாலின் உறுதிபடக் கூறினார்.

நம்பிக்கை வாக்கெடுப்பு தொடர்பாக, பேரவையில் ரகசிய வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்பது மக்கள் விருப்பம் என்று கூறிய ஸ்டாலின், திமுக நடத்தும் போராட்டம் சுயநலத்திற்கானதல்ல என்றும், பினாமி ஆட்சியை தமிழகத்திலிருந்து அகற்றவே போராட்டம் நடத்தப்பட்டதாகவும் கூறினார். ‌

திமுக ஆட்சிக்கு வந்தால் ஜெயலலிதாவின் மரணம் தொடர்பாக நீதி விசாரணை நடத்தப்படும் என கூறிய அவர் ஜெயலலிதாவின் மரணம் தொடர்பாக முறையாக விசாரிக்கப்பட்டால், பெங்களூருவில் சிறையில் இருப்பவர்கள் ஆயுள் கைதியாகவே இருக்க வேண்டிய நிலை ஏற்படும் என கூறினார். “கட்சி சார்பற்று போராட்டத்தில் பங்கேற்றவர்களுக்கு அவர் நன்றி தெரிவித்தார்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close