சமூக வலைத்தளங்களில் ‘ஓரளவுக்கு தான் பொறுமை’ என்கிற ஹேஷ்டேக் மிக பிரபலமாகி வருகிறது. இந்த ஹேஷ்டேக் பிரபலமாவதற்கு காரணம் தமிழக அரசியல் களமும் சசிகலாவும்தான் ஆகும்.
தமிழக அரசியல் களம் சூடு கண்டுள்ள இந்த நிலையில் போயஸ் தோட்டத்தில் கட்சியினர் மத்தியில் பேசிய அதிமுக பொதுச் செயலாளர் சசிகலா, ஓரளவுக்குத்தான் பொறுமை.. அதற்கு மேல் அதிமுகவினர் அனைவரும் சேர்ந்து செய்ய வேண்டியதைச் செய்வோம் என கூறியிருந்தார். சசிகலாவின் இந்த பேச்சு மிரட்டுகிற தொனியில் இருப்பதாக கூறி, பன்னீர்செல்வம் தரப்பு அதிமுக எம்.பி மைத்ரேயன் தனது கடும் கண்டனம் தெரிவித்திருந்தார்.
அரசியலானாலும் சரி... இல்லை மற்ற விஷயமானாலும் சரி... இளைஞர்கள் தங்களது கருத்துகளை உடனடியாக சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகின்றனர். தலைவர்களின் கருத்துகளுக்கும் தங்களது சமூக வலைத்தள பக்கத்திலேயே எதிர்வினையாற்றி விடுகின்றனர். அந்த வகையில் சசிகலா பேசிய ‘ஓரளவுக்கு தான் பொறுமை’ என்கிற வார்த்தை சமூக வலைத்தளங்களில் பிரபலமாகி வருகிறது. #ஓரளவுக்கு_தான்_பொறுமை என்கிற ஹேஷ்டேக்கில் சசிகலாவிற்கு எதிராக பலரும் தங்களது கருத்துகளையும், மீம்ஸ்களையும் பதிவிட்டு வருகின்றனர். மேலும் இந்த மீம்ஸ்-கள் பலராலும் ஷேர் செய்யப்பட்டு வருகிறது. தற்போது ட்விட்டரில் டாப் டிரெண்டாக இருப்பது #ஓரளவுக்கு_தான்_பொறுமை என்ற ஹேஷ்டேக்தான்.
மிரட்டிய விராட் கோலி - இந்திய அணி அபார வெற்றி
'ராமருக்கு கோயில் கட்டும் வேளையில் சீதைகள் எரிக்கப்படுகிறார்கள்' காங்கிரஸ் எம்.பி. சர்ச்சை பேச்சு
ஊழல் புகார்: அலகாபாத் உயர்நீதிமன்ற நீதிபதி மீது சிபிஐ வழக்குப் பதிவு
“நித்தியானந்தாவி்ன் பாஸ்போர்ட்டை ரத்து செய்துள்ளோம்” - வெளியுறுவுத்துறை அமைச்சகம்
“எங்களது துப்பாக்கியையே எடுத்து மிரட்டினர்” - என்கவுன்ட்டர் குறித்து போலீஸ் விளக்கம்