[X] Close
JUST IN
  • BREAKING-NEWS ரஜினி, கமல், விஜய் அனைவரும் மாய பிம்பங்கள், தமிழக அரசியலில் எடுபடாத சக்திகள் - அமைச்சர் ஜெயக்குமார்
  • BREAKING-NEWS உள்ளாட்சித் தேர்தலில் அதிமுக தனித்துப்போடியிட தயார் - அமைச்சர் ராஜேந்திர பாலாஜி
  • BREAKING-NEWS சபரிமலை கோயிலுக்கு என கேரள அரசு தனிச்சட்டம் உருவாக்க வேண்டும் - உச்சநீதிமன்றம்
  • BREAKING-NEWS தமிழகத்தில் 3 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்பு - இந்திய வானிலை ஆய்வு மையம்
  • BREAKING-NEWS ப.சிதம்பரத்தின் ஜாமீன் மனு மீது உச்சநீதிமன்றம் இன்று விசாரணை
  • BREAKING-NEWS தமிழகத்தில் பழைய சொத்துவரி முறையே தொடரும்: அமைச்சர் எஸ்.பி.வேலுமணி அறிவிப்பு
  • BREAKING-NEWS சர்க்கரை குடும்ப அட்டைகள் வைத்திருப்பவர்கள், விரும்பினால் அரிசி குடும்ப அட்டைகளாக மாற்றிக் கொள்ளலாம்: தமிழக அரசு

கமல்ஹாசனுக்கு பீட்டா பதில்..!

peta-answered-to-kamal-hassan

அமெரிக்காவில் காளைகள் மீது மனிதர்கள் சவாரி செய்வதை முதலில் பீட்டா அமைப்பு தடை செய்யட்டும் என நடிகர் கமல்ஹாசன் தெரிவித்திருந்த கருத்துக்கு பீட்டா இந்தியா பதிலளித்துள்ளது.

அதில், கமல்ஹாசன் குறிப்பிடும் ரோடியோ எனப்படும் காளை மீது சவாரி செய்யும் போட்டிகளுக்கு எதிராக பீட்டா அமெரிக்கா அமைப்பு செயல்பட்டு வருவதாகவும், பல மாகாணங்களில் ரோடியோ தடை செய்யப்பட்டிருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது. பிரிட்டன், நெதர்லாந்து உள்ளிட்ட நாடுகளிலும் ரோடியோ தடைசெய்யப்பட்டிருப்பதாகவும் பீட்டா இந்தியா தெரிவித்துள்ளது.

ஸ்பெயின் நாட்டில் நடைபெறும் காளை அடக்கும் போட்டிக்கு எதிராக பீட்டா ஐரோப்பா அமைப்பு போராடி வருவதாகவும் பீட்டா தெரிவித்துள்ளது.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close