[X] Close
JUST IN
  • BREAKING-NEWS இந்தியாவில் அதிகம் பயன்படுத்தப்பட்ட ஹேஷ்டேக் - ‘விஸ்வாசம்’ முதலிடம்
  • BREAKING-NEWS அமேசான் காடுகளில் பற்றி எரியும் தீ - விளைவுகள் என்ன?
  • BREAKING-NEWS சிபிஐ காவலை ரத்து செய்யக்கோரி ப.சிதம்பரம் தரப்பில் மனு
  • BREAKING-NEWS போலீசாரின் முழுக் கட்டுப்பாட்டிற்குள் வந்த சென்னை விமான நிலையம்

திமுக தலைவர் கருணாநிதி வீடு திரும்பினார்

dmk-leader-karunanidhi-back-to-home

சென்னை காவேரி மருத்துவமனையில் திமுக தலைவர் கருணாநிதி வீடு திரும்பினார்.

சென்னை காவேரி மருத்துவமனையில் கடந்த 15ம் தேதி முதல் சிகிச்சை பெற்று வந்த திமுக தலைவர் கருணாநிதி, பூரண நலம் பெற்றுவிட்டதால் இன்று மாலை வீடு திரும்பினார். சென்னை கோபாலபுரத்தில் உள்ள அவரது இல்லத்திற்கு திரும்பினார். மருத்துவமனை அறிக்கையில் முழு ஓய்வு எடுக்க கருணாநிதியை மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர். கருணாநிதிக்கு வீட்டிலேயே சிகிச்சை அளிக்கப்படும் எனவும் பார்வையாளர்களை சந்திப்பதை தவிர்க்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளனர் .

முன்னதாக கடந்த 15ம் தேதி தொண்டை மற்றும் நுரையீரல் தொற்றால் ஏற்பட்ட மூச்சுத்திணறல் காரணமாக சென்னை சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மூச்சுத்திணறலுக்காக கருணாநிதிக்கு ட்ரக்கியோஸ்டோமி சிகிச்சை அளிக்கப்பட்டது. இதனையடுத்து கருணாநிதியின் உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டது. கருணாநிதி நலமுடன் நாற்காலியில் அமர்ந்து டிவி பார்க்கும் புகைப்படத்தையும் காவேரி மருத்துவமனை நிர்வாகம் சில நாட்களுக்கு முன்பு வெளியிட்டது. இந்நிலையில் திமுக தலைவர் கருணாநிதி மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பி இருப்பது திமுக தொண்டர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close