JUST IN
 • BREAKING-NEWS மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட்: இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் இந்தியா வெற்றி
 • BREAKING-NEWS என் நாடிநரம்பில் ஓடுவதெல்லாம் கண்ணதாசனின் வரிகள் : இளையராஜா
 • BREAKING-NEWS எதிர்ப்புகள் வந்தால்தான் அரசியலில் ரஜினியால் சிறந்து விளங்க முடியும்: குருமூர்த்தி
 • BREAKING-NEWS அசாம்: கவுகாத்தியில் ரூ.2கோடி மதிப்புள்ள போதை மாத்திரைகள் பறிமுதல்
 • BREAKING-NEWS இந்தியிலும் பாஸ்போர்ட் என்பதை திரும்பப்பெற வேண்டும்: ஸ்டாலின்
 • BREAKING-NEWS ஸ்டாலின் முதல்வராகிவிடுவார் என்ற பயத்தில் ரஜினியை முன்னெடுக்கிறது பாஜக : சீமான்
 • BREAKING-NEWS உலக ஹாக்கி லீக் போட்டியில் பாகிஸ்தான் அணியை வீழ்த்தியது இந்திய அணி
 • BREAKING-NEWS சசிகலா கூறியதால் பாஜக வேட்பாளருக்கு ஆதரவு: டிடிவி தினகரன்
 • BREAKING-NEWS நீட் தேர்வில் விலக்கு வேண்டும் என்பதில் அரசு உறுதியாக உள்ளது: விஜயபாஸ்கர்
 • BREAKING-NEWS மகாராஷ்ட்ராவில் விவசாயக் கடன்களை தள்ளுபடி செய்ய மாநில அரசு முடிவு
 • BREAKING-NEWS இலங்கை கடற்படையால் கைதான 8 தமிழக மீனவர்களுக்கு ஜூலை 7 வரை காவல்
 • BREAKING-NEWS நீட் தேர்வால் குழப்பமான கல்வி சூழல் உருவாகியுள்ளது: பிரின்ஸ் கஜேந்திரபாபு
 • BREAKING-NEWS உள்ளாட்சி தேர்தலை நடத்த அதிமுக அரசு அஞ்சுகிறது: மு.க.ஸ்டாலின்
 • BREAKING-NEWS உள்ளாட்சி தனி அதிகாரிகளின் பதவிக்காலத்தை நீட்டிக்கும் மசோதா நிறைவேற்றம்
தமிழ்நாடு 22 Dec, 2016 05:57 PM

பயிர் கருகியதால் உயிரிழக்கும் சோகம் தொடர்கிறது வேதாரண்யம் பகுதியில் 6வது விவசாயி உயிரிழப்பு

டெல்டா மாவட்டங்கள் என்றதும் நம் அனைவரது நினைவுக்கு வருவது பசுமையான வயல்வெளிகளும் அவை சார்ந்த நினைவுகளும் தான். ஆனால் முப்போகமும் ஜாருராக விவசாயம் நடக்கும் பகுதியில் இன்று விவசாயிகள் தற்கொலை நடக்கும் சம்பவம் தொடர்கிறது. மடைதிறந்து விவசாயம் செய்த காலம் போய் இன்று மாண்டு கொண்டிருக்கின்றனர் விவசாய பெருங்குடிகள். அதிகாலை சூரியன் உதித்தால் கண்களுக்கு பவ்யமாக காட்சித்தரும் காவிரி டெல்டா பகுதியில் இன்று நித்தம் ஒரு வீட்டில் பறையிசை ஒலிக்கிறது.

டெல்டா மாவட்டங்களில் விவசாயம் பொய்த்ததால் ஏற்பட்ட விரக்தியில், கடந்த ஒரு மாதத்தில் மட்டும் 6 விவசாயிகள் தற்கொலை செய்துகொண்டுள்ளனர். பயிர் கருகுவதோடு அவர்களின் உயிரும் கருகிப் போகிறது. நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகேயுள்ள ஆயக்காரன்புலத்தைச் சேர்ந்த விவசாயி நடராஜன் ஒரு ஏக்கர் நிலத்தில் சாகுபடி செய்யப்பட்டிருந்த சம்பா பயிர், பருவ மழை பொய்த்ததால் கருகியுள்ளது. பயிர் கருகிய அதிர்ச்சியில் மாரடைப்பு ஏற்பட்டு வயலில் இன்று காலை மயங்கி விழுந்துள்ளார். திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். உறவினர்கள் கொடுத்த புகாரின் பேரில், வாய்மேடு காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

நடராஜனைப் போலவே ஏற்கனவே ஐந்து விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

திருத்துறைப்பூண்டியைச் சேர்ந்த கோவிந்தராஜ் 2 போக சாகுபடியும் பொய்த்துப் போனதால், பயிர்க்கடனை திருப்பி செலுத்த முடியாத விரக்தியில், விஷம் அருந்தி தனது வயலிலேயே உயிரிழந்தார். கூத்தாநல்லூர் அருகேயுள்ள ஓவர்சேரியைச் சேர்ந்த துரைராஜ் என்ற விவசாயி பயிர்கள் கருகியதால், தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். ஈரோடு கொடுமுடி அருகேயுள்ள கரட்டுப்பாளையத்தைச் சேர்ந்த ராமலிங்கம் என்ற விவசாயி, காளிங்கராயன் கால்வாயில் தண்ணீர் திறக்காததால் மஞ்சள் விளைச்சல் பாதிக்கப்பட்ட சோகத்தில் விஷம் அருந்தி தற்கொலை செய்தார்.

திருவாரூர் அருகேயுள்ள முசிறியத்தைச் சேர்ந்த சேகர், தான் சாகுபடி செய்த 3 ஏக்‌கர் விளைநிலமும் தண்ணீர் இன்றி கருகியதால், விஷம் குடித்து உயிரை மாய்த்துக் கொண்டார். நாகை மாவட்டம் தலைஞாயிறு அருகேயுள்ள பிருஞ்சிமுளைபகுதியைச் சேர்ந்த விவசாயி முருகையன் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். அவரைப் போலவே, தாமரைப்பாளையத்தை சேர்ந்த மஞ்சள் விவசாயி முத்துசாமியும், தனது மஞ்சள் காட்டில் விஷம் குடித்தார். திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த அவர், கடந்த 30ஆம் தேதி உயிரிழந்தார்.

Advertisement:
Advertisement:
puthiyathalaimurai ads