[X] Close
JUST IN
  • BREAKING-NEWS கனமழை காரணமாக தூத்துக்குடியில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை
  • BREAKING-NEWS நாளை முதல் காலவரையற்ற வேலைநிறுத்தம்: ஆவின் பால் டேங்கர் லாரி ஒப்பந்த உரிமையாளர்கள் அறிவிப்பு
  • BREAKING-NEWS கோயம்புத்தூர் - பொள்ளாச்சி உள்ளிட்ட 3 புதிய ரயில் சேவைகள் இன்று அறிமுகம்
  • BREAKING-NEWS இன்று முதல் 4 நாட்களுக்கு தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் அறிவிப்பு

சென்னை ஐஐடியில் படித்தவர் கிரிஜா வைத்தியநாதன்

details-about-girija-vaidyanathan

கிரிஜா வைத்தியநாதன் 1981ஆம் ஆண்டு தமிழ்நாடு பிரிவு ஐஏஎஸ் அதிகாரி. 01.07.1959 - இல் பிறந்த கிரிஜா வைத்தியநாதன் முதுகலை பட்டதாரியான இவர் சென்னை ஐஐடியில் நல்வாழ்வுப் பொருளாதாரத் துறையில் முனைவர் பட்டம் பெற்றவர்.

நலவாழ்வு பொருளாதாரம் என்ற தலைப்பில் ஆய்வு செய்து முனைவர் பட்டம் பெற்றவர் கிரிஜா. மக்கள் நல்வாழ்வு, ஊட்டச்சத்து, சுற்றுச்சூழல் துறைகளில் மிகுந்த அனுபவம் மிக்கவர். சுகாதாரம், கல்வி, விவசாயம், போக்குவரத்து, திட்டமிடல் துறைகளில் உயர் பொறுப்புகளை வகித்தவர்.

தமிழகத்தில் தாய் சேய் நலத்திட்டத்தை செயல்படுத்தியதில் முக்கிய பங்காற்றியவர் கிரிஜா வைத்தியநாதன். ஐ.ஏ.எஸ். அதிகாரியாக 30 ஆண்டுக்கு மேல் அனுபவம் உடையவர். கூடுதல் தலைமைச் செயலாளர் அந்தஸ்தில் இருந்த கிரிஜாவுக்கு தற்போது பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது. கிரிஜா வைத்தியநாதன் நிர்வாக சீர்திருத்தம், கண்காணிப்பு ஆணையர் பதவிகளை கூடுதலாக கவனிப்பார் என கூறப்படுகிறது. வருமான வரித்துறை சோதனையைத் தொடர்ந்து தமிழக தலைமை செயலாளர் பொறுப்பில் இருந்து ராமமோகன ராவ் இடைநீக்கம் செய்யப்பட்டார்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close