[X] Close
JUST IN
  • BREAKING-NEWS கவுரவ டாக்டர் பட்டம் பெற்றார் முதலமைச்சர் பழனிசாமி
  • BREAKING-NEWS நாங்குநேரி இடைத்தேர்தல் பணப்பட்டுவாடா விவகாரம்: திமுக எம்எல்ஏ சரவணகுமார் மீது மேலும் ஒரு வழக்குப்பதிவு
  • BREAKING-NEWS தொடர் மழை: ஓராண்டுக்குப் பிறகு 100 அடியை எட்டியது பவானி சாகர் அணை
  • BREAKING-NEWS தமிழகத்தில் மேலும் நான்கு நாட்களுக்கு மழை நீடிக்கும் என வானிலை மையம் தகவல்
  • BREAKING-NEWS புரோ‌ கபடி லீக் தொடரில் பெங்கால் ‌வாரியர்ஸ் அணி ‌முதல் முறையாக சாம்பியன்‌. இறுதிப்போட்டியில் தபாங் டெல்லியை வீழ்த்தியது.

பொதுச்செயலாளராக சசிகலாவை தேர்வு செய்யும் விவகாரம்.. இடைக்கால உத்தரவு பிறப்பிக்க உயர்நீதிமன்றம் மறுப்பு

aiadmk-in-high-court-for-quashing-plea-to-prevent-sasikala-from-becoming-general-secretary-read-mo

அதிமுக பொதுச்செயலாளராக சசிகலாவை தேர்ந்தெடுப்பதை எதிர்த்த வழக்கில் இடைக்கால உத்தரவு பிறப்பிக்க முடியாது என்று சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

அதிமுக கட்சி விதிகளை மாற்றி, பொதுச்செயலாளராக வி.கே.சசிகலாவை அறிவிக்க தடை விதிக்க கோரி மாநிலங்களவை உறுப்பினர் சசிகலா புஷ்பா மற்றும் அவரது கணவர் லிங்கேஷ்வர திலகம் ஆகியோர் தொடர்ந்த வழக்கு, மீண்டும் நீதிபதி கல்யாண சுந்தரம் முன்னிலையில் நேற்று விசாரணைக்கு வந்தது.

அப்போது அ.தி.மு.க தரப்பில் அவைத்தலைவர் மதுசூதனன் சார்பில் நிராகரிப்பு கோரிக்கை மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில் சசிகலா புஷ்பா அதிமுக உறுப்பினர் அல்ல என்றும், அவருக்கு வழக்கு தொடுக்கும் அதிகாரம் கிடையாது என்றும் குறிப்பிட்டிருந்தது. மேலும் வி.கே.சசிகலாவை கட்‌சியில் இருந்து நீக்கிப் பிறப்பிக்கப்பட்ட உத்தரவை முன்னரே ஜெயலலிதா ரத்து செய்துவிட்டதாகவும், எனவே அவர் 5 வருடங்களுக்கும் மேல் உறுப்பினராக உள்ளார் எ‌ன்றும் தெரிவிக்கப்பட்டது.

அரசியல் உள்நோக்கம் கொண்டதால் சசிகலா புஷ்பா தாக்கல் செய்துள்ள மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டது. மேலும் அவரது மனுவுக்கு பதிலளிக்க வேண்டிய அவசியம் இல்லை என அதிமுக தரப்பு வழக்கறிஞர் ஆர்.கிருஷ்ணமூர்த்தி வாதிட்டார்.

அப்போது சசிகலா புஷ்பா வழக்கறிஞர் பிரகாஷ், அதிமுக பதிலளிப்பதற்கும் இதற்கும் சம்பந்தமில்லை, எனவே நோட்டீசுக்கு பதிலளிக்க வேண்டும் என வாதிட்டார். அப்போது, நீதிபதி கல்யாணசுந்தரம் குறுக்கிட்டு நீதிமன்ற நோட்டீசுக்கு எப்போது பதிலளிக்க உள்ளீர்கள் என அதிமுக தரப்பு வழக்கறிஞரிடம் கேட்டார். இதையடுத்து அ.தி.மு.க தரப்பில் பதிலளிக்க கால அவகாசம் கேட்கப்பட்டத‌ல் வழக்கு விசாரணையை வரும் வெள்ளிக்கிழமை பிற்பகலுக்கு நீதிபதி ஒத்திவைத்து உத்தரவிட்டார்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close