[X] Close
JUST IN
  • BREAKING-NEWS 2 பிரமோஸ் ஏவுகணைகளை வெற்றிகரமாக சோதித்தது இந்தியா
  • BREAKING-NEWS 10, 11, 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகளுக்கு கூடுதல் நேரம் ஒதுக்கீடு. இரண்டரை மணி நேர தேர்வு மூன்று மணி நேரமாக அதிகரிப்பு
  • BREAKING-NEWS மேட்டூர் அணை நிரம்பி வருவதால், காவிரி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை
  • BREAKING-NEWS தமிழகத்தில் 21 மாவட்டங்களில் மழை நீடிக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்

நான்கு மாதங்களுக்கு மீன்பிடிக்கத் தடை: மீனவர்கள் எதிர்ப்பு

for-four-months-banned-fishing-fishermen-protest

கன்னியாகுமரி மாவட்டத்தில், ஆமைகள் முட்டையிடும் காலம் என்பதால் நான்கு மாதங்களுக்கு மீன்பிடிக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளதற்கு மீனவர்கள் கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர்.

ஆமைகள் இனப்பெருக்கம் செய்யும் காலம் எனக் கூறி ஜனவரி 1ம் தேதி முதல் ஏப்ரல் 31ம் தேதி வரை தமிழகத்திலுள்ள 90 கடலோர கிராமங்களில் மீன்பிடிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.இதில் கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள 18 கடலோர கிராமங்களும் அடக்கம். ஆனால் அந்த கிராமங்களில் கடலரிப்பு தடுப்புச்சுவர்கள் அமைக்கப்பட்டுள்ளதால், ஆமைகள் முட்டையிடுவது இல்லை என மீனவர்கள் கூறுகின்றனர். எனவே இந்தப் பகுதியிலும் மீன்பிடிக்க தடை அறிவிக்கப்பட்டுள்ளதற்கு மீனவர்கள் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர்.

மீன்பிடி தடைக்காலம், கடல் சீற்றம் போன்ற காரணங்களால் ஏற்கனவே 7 மாதங்களாக கடலுக்கு செல்ல முடியவில்லை,தற்போது இந்தத் தடையும் கூடுதலாக அறிவிக்கப்பட்டுள்ளதால் தங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாக அவர்கள் கூறுகின்றனர். தடை விதிக்கப்பட்ட பகுதிகளை மறு ஆய்வு செய்து அரசாணை வெளியிட வேண்டும் என்ற கோரிக்கையும் மீனவர்கள் முன்வைத்துள்ளனர்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close