[X] Close
JUST IN
  • BREAKING-NEWS உள்ளாட்சிப் பதவிகளை ஏலம் விடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க உத்தரவு - மாநில தேர்தல் ஆணையம்
  • BREAKING-NEWS திருச்சி மலைக்கோட்டை, திருப்பரங்குன்றம், பழனி ஆகிய கோயில்களிலும் கார்த்திகை தீபம் ஏற்றப்பட்டது!
  • BREAKING-NEWS உள்ளாட்சித் தேர்தல் அறிவிப்பாணைக்கு எதிரான திமுகவின் மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் - தமிழக அரசு
  • BREAKING-NEWS ஏற்றப்பட்டது திருவண்ணாமலை மகா தீபம் : பக்தர்கள் உற்சாகம்
  • BREAKING-NEWS “மறைமுகத் தேர்தலுக்கான அவசரச் சட்டம் சட்ட விரோதமானதல்ல”- சென்னை உயர்நீதிமன்றம்
  • BREAKING-NEWS உள்ளாட்சித் தேர்தலில் ரஜினி மக்கள் மன்றத்தினர் போட்டியிடக் கூடாது என அறிக்கை
  • BREAKING-NEWS நிர்பயா வழக்கு: தூக்கு தண்டனை குற்றவாளி உச்சநீதிமன்றத்தில் மனு

போர்க்கால அடிப்படையில் சீரமைப்பு பணிகள்.. அமைச்சர் தங்கமணி தகவல்

renovation-works-on-war-time-measures-minister-thangamni

வர்தா புயலின் பாதிப்பையடுத்து போர்க்கால அடிப்படையில் சீரமைப்பு பணிகள் நடைபெற்று வருவதாக மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார்.

வர்தா புயல் கோரத் தாண்டவம் ஆடி சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கடுமையான பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் புயல் பாதிப்பிற்கு பின் போர்க்கால அடிப்படையில் சீரமைப்பு பணிகள் நடைபெற்று வருவதாக அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார். மேலும், சென்னையில் மண்ணிற்குள் புதைக்கப்பட்ட கேபிள்கள் மூலம் மின்விநியோகம் செய்யப்படுவதால் விரைவில் மின்சாரம் வழங்க முடிந்ததாகவும் அமைச்சர் கூறியுள்ளார்.

சென்னை புறநகர் பகுதிகளில் சுமார் 20,000 மின்கம்பங்கள் விழுந்துள்ளதாகவும், அதில் கடந்த 2 நாட்களாக 6,000 கம்பங்களுக்கு மேல் மாற்றியமைக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ள அமைச்சர், 3 நாட்களுக்குள் புறநகர் பகுதிகளிலும் முழுவதுமாக மின்விநியோகம் செய்யப்படும் என உறுதியளித்தார்.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close