[X] Close
JUST IN
  • BREAKING-NEWS புவி வட்டப்பாதையில் இருந்து விலகிய சந்திரயான் -2, நிலவின் வட்டப் பாதையைச் சுற்றத் தொடங்கியது
  • BREAKING-NEWS பால் உற்பத்தியாளர்கள்-மக்கள் இடையே பிளவை ஏற்படுத்த முதல்வர் பழனிசாமி முயற்சிக்கிறார் - மு.க.ஸ்டாலின்
  • BREAKING-NEWS பரோலை மேலும் ஒரு மாதம் நீட்டிக்கக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் நளினி வழக்கு. கோரிக்கை குறித்து சிறைத்துறை பதிலளிக்க உத்தரவு
  • BREAKING-NEWS ஜம்மு காஷ்மீர் விவகாரம் தொடர்பாக 22ஆம் தேதி டெல்லியில் திமுக சார்பில் ஆர்ப்பாட்டம். அனைத்துக் கட்சி எம்.பி.க்கள் பங்கேற்பார்கள் என மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
  • BREAKING-NEWS 12 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு என வானிலை ஆய்வு மையம் தகவல்

சென்னை ஐஐடி-யை சூறையாடிய வர்தா

iit-madras-hold-ravaged-varta

சென்னை மாநகரில் அதிக மரங்கள் உள்ள பகுதிகளில் சென்னை ஐஐடியும் முக்கியமானது. வர்தா புயல் இங்குள்ள மரங்களை சூறையாடியுள்ளது.

சென்னை கிண்டியில் சுமார் 650 ஏக்கர் பரப்பளவில் ஐ.ஐ.டி. எனப்படும் இந்திய தொழில்நுட்பக் கழகம் செயல்பட்டு வருகிறது. வனப்பகுதியை புனரமைத்து கட்டப்பட்ட, இந்த ஐஐடி வளாகத்தில் ஆலமரம், சந்தனம், தேக்கு‌ உள்ளிட்ட ஏராளமான மரங்கள் இருந்தன. சென்னையை புரட்டிப்போட்ட வர்தா புயல், ஐஐடி வளாகத்தில் இருந்த மரங்களையும் விட்டுவைக்கவில்லை. ஐஐடியில் இருந்த ஏராளமான மரங்கள் வேரோடு சாய்ந்ததன. ஐஐடியில் உள்ள எஸ்.பி.ஐ.வங்கியும் பெரும் சேதத்திற்கு உள்ளானது. கீழே விழுந்த மரங்களை அகற்றும் பணி விரைந்து முடிந்தாலும், பசுமை நிறைந்த ஐஐடி வளாகத்தை மீண்டும் எப்போது பார்ப்போம் என்கின்றனர் அங்கு பணியாற்றும் ஊழியர்கள்.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close