[X] Close
JUST IN
  • BREAKING-NEWS நாங்குநேரி இடைத்தேர்தல் பணப்பட்டுவாடா விவகாரம்: திமுக எம்எல்ஏ சரவணகுமார் மீது மேலும் ஒரு வழக்குப்பதிவு
  • BREAKING-NEWS தொடர் மழை: ஓராண்டுக்குப் பிறகு 100 அடியை எட்டியது பவானி சாகர் அணை
  • BREAKING-NEWS தமிழகத்தில் மேலும் நான்கு நாட்களுக்கு மழை நீடிக்கும் என வானிலை மையம் தகவல்
  • BREAKING-NEWS புரோ‌ கபடி லீக் தொடரில் பெங்கால் ‌வாரியர்ஸ் அணி ‌முதல் முறையாக சாம்பியன்‌. இறுதிப்போட்டியில் தபாங் டெல்லியை வீழ்த்தியது.

புயல், மழைக்குப் பிறகு பின்பற்ற வேண்டியவை..!

instructions-for-after-rain

புயல், மழைக்கு பிறகு பொதுமக்‌கள் கண்டிப்பாக பின்பற்ற வேண்டிய குறிப்புகளை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.

* வெள்ளநீர் வடிந்த பிறகும், ஆற்றங்கரை மற்றும் நீர்நிலைகளின் அருகே செல்லக்கூடாது.
* வெள்ளநீர் புகுந்த கட்டடத்திற்குள் செல்லும் முன், மின் இணைப்பு, எரிவாயு சிலிண்டர் இணைப்பு, மோட்டார் பம்ப் உள்ளிட்ட மின்சாதனங்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டியது அவசியம்.
* மின்சார உபகரணங்களில் சேதம் ஏற்பட்டிருந்தால், உடனடியாக மின் இணைப்பை துண்டிக்க வேண்டும்.
* கழிவு நீர் மற்றும் குடிநீர் இணைப்புகளில் உடைப்பு ஏற்பட்டிருந்தால், அவற்றை உடனடியாக சரி செய்வதன் மூலம் நோய் பரவுவதை தடுக்க முடியும்.
* வெள்ளநீரில் நனைந்த மருந்து, உணவுப்பொருட்கள் மற்றும் பாட்டில்களில் அடைக்கப்பட்ட தண்ணீர், பானங்கள் ஆகியவற்றை பயன்படுத்தக் கூடாது.
* குளோரின் கலந்த பாதுகாப்பான தண்ணீரை கொதிக்க வைத்து பருக வேண்டும்.
* வெள்ளத்தால் அடித்துச் செல்லப்பட்ட சாலைகள், மண்சரிவுகள், கீழே விழுந்த மரங்கள், அறுந்து விழுந்த மின் இணைப்புகளை கவனமாக கையாள வேண்டும்.
* உறுதியான காலணிகளை அணிந்து கொண்டு வெளியே செல்ல வேண்டும்.
* சிறிய காயங்களைக் கூட அலட்சியப்படுத்தாமல் உடனடியாக சிகிச்சை எடுக்க வேண்டும்.
* மின் உபகரணங்களை வெள்ள நீரால் பாதிக்காத அளவிற்கு உயரமான இடத்தில் அமைக்க வேண்டும்.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close