[X] Close
JUST IN
  • BREAKING-NEWS அடுத்த 5 நாட்களுக்கு கனமழை நீடிக்கும் - இந்திய வானிலை ஆய்வு மையம்
  • BREAKING-NEWS சென்னையில் சாலைகளில் தேங்கியுள்ள மழைநீரால் வாகன ஓட்டிகள் அவதி
  • BREAKING-NEWS சென்னையில் பள்ளிகள் வழக்கம்போல இயங்கும் : மாவட்ட ஆட்சியர்

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு கன்னியாகுமரியில் மணற்சிற்பம்

sand-sculpture-for-jayalalithaa-in-kanyakumari

மறைந்த தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவிற்கு அஞ்சலி செலுத்தும் விதமாக முக்கடல் சங்கமிக்கும் கன்னியாகுமரி கடற்கரையில் அவருடைய உருவம் மணல் சிற்பத்தால் வடிவமைக்கப்பட்டுள்ளது.

9 டன் மணலால் உருவாக்கப்பட்டுள்ள இந்த மணற்சிற்பம் 8 மணி நேரத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனை பார்க்கும் சுற்றுலா பயணிகளும், பொதுமக்களும் ஜெயலலிதா மணச்சிற்பத்திற்கு கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

இதனிடையே, மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவிற்கு கன்னியாகுமரி கடற்கரையில் மணிமண்டபம் கட்ட வேண்டும் எனவும் அதில் அவரது முழு உருவ வெண்கலச்சிலை வைக்க வேண்டும் என்றும் அ.தி.மு.கவினர் கோரிக்கை வைத்துள்ளனர்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close