[X] Close
JUST IN
  • BREAKING-NEWS தமிழகத்தின் 33-வது மாவட்டமாக உதயமானது தென்காசி
  • BREAKING-NEWS தமிழ்நாட்டில் விரைவில் உள்ளாட்சித் தேர்தல்: முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி
  • BREAKING-NEWS தமிழகத்தில் 2 நாட்கள் மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்
  • BREAKING-NEWS குழந்தைகளை கடத்தி வைத்த புகாரில் நித்தியானந்தா மீது கிரிமினல் வழக்குப்பதிவு
  • BREAKING-NEWS 2021-ஆம் ஆண்டு தேர்தலில் தமிழக மக்கள் அதிசயம் நிகழ்த்துவார்கள்: ரஜினிகாந்த்

'பொன்னியின் செல்வி' ஜெயலலிதாவிற்கு காவிரி கரையில் மணி மண்டபம் அமைக்க கோரிக்கை

memorial-hall-of-jayalalithaa-in-cauvery-shore

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவிற்கு காவிரி கரையில் மணி மண்டபம் கட்ட விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் உடல் சென்னை மெரினாவில் உள்ள எம்ஜிஆர் நினைவக வளாகத்தில் நேற்று நல்லடக்கம் செய்யப்பட்டது. இந்நிலையில், முல்லைப்பெரியாறு, காவிரி பிரச்னைகளில் தமிழகத்தின் உரிமையை நிலைநாட்டிய ஜெயலலிதாவின் புகழ் பல தலைமுறைகளை கடந்து நிற்கும் வகையில், காவிரி கரையில் அமைந்துள்ள கல்லணையில் ஜெயலலிதாவிற்கு மணிமண்டபம் அமைக்க விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும், காவிரி நீர் பிரச்னையில் தமிழகத்திற்காக ஜெயலலிதா நடத்திய சட்டப்போராட்டங்களை விளக்கும் கல்வெட்டு அமைக்கவும் விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.

டெல்டா மாவட்ட விவசாயிகள் ஏற்கனவே ஜெயலலிதாவிற்கு ‘பொன்னியின் செல்வி’ என்ற பட்டத்தை வழங்கி கவுரவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close