தமிழக ஆளுநர் வித்யாசாகர் ராவ் மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கிடம் தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு தொடர்பான பிரச்னைகள் எதுவுமில்லை என்று விளக்கம் அளித்துள்ளார்.
தமிழக முதலமைச்சர் அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில் அவரது உடல்நிலை குறித்து பல்வேறு வதந்திகள் பரவி வருகிறது. இதனால் தமிழக முதல்வரின் உடல்நலம் குறித்து பல்வேறு கட்சித் தலைவர்களும் விசாரித்து வருகின்றனர்.
இந்நிலையில் ஆளுநர் வித்யாசாகர் ராவ்விடம் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசிய அமைச்சர் ராஜ்நாத் சிங் முதலமைச்சரின் உடல்நிலை குறித்தும், தமிழகத்தில் சட்ட ஒழுங்கு குறித்தும் கேட்டறிந்தார். அதற்கு பதிலளித்த வித்யாசாகர் ராவ், முதல்வருக்கு தகுந்த சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக கூறியுள்ளார். மேலும் முதல்வர் உடல்நிலை குறித்து தவறான வதந்திகள் பரப்பப்பட்டு வருவதால் தான் காவல் துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருவதாக தெரிவித்தார். காவல் துறையினர் அதிக அளவில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதால் தமிழகத்தில் சட்ட ஒழுங்கு பாதிக்கப்பட்டுள்ளதாகக் கருத வேண்டாம் என்று ராஜ்நாத் சிங்கிடம் கேட்டுக்கொண்டுள்ளார்.
உள்ளாட்சித் தேர்தலில் ரஜினி மக்கள் மன்றத்தினர் போட்டியிடக் கூடாது என அறிக்கை
“நிர்பயா வழக்கு குற்றவாளிகளை தூக்கிலிடும் பணியை செய்யத் தயார்”-தமிழக கான்ஸ்டபிள் விருப்பம்
''அளவில் பெரியதாக இருக்கிறது'': வாங்க ஆள் இல்லாமல் கிடக்கும் எகிப்து வெங்காயம்!
குடியுரிமை சட்டத் திருத்த மசோதா மக்களவையில் நிறைவேற்றம்..!
திருவண்ணாமலையில் இன்று மாலை மகா தீபம்.. பக்தர்களுக்கு சிறப்பு ஏற்பாடு..!
“நிர்பயா வழக்கு குற்றவாளிகளை தூக்கிலிடும் பணியை செய்யத் தயார்”-தமிழக கான்ஸ்டபிள் விருப்பம்
“என்கவுன்ட்டர் மகிழ்ச்சியான விஷயம் அல்ல” - மௌனத்தை கலைத்த சமந்தா
‘வர்லாம் வர்லாம் வா...’.. 80 வயதிலும் தளராத மனம்.... யார் இந்த சுல்தான் தாத்தா..!
தாயின் குரலை முதன்முதலாக கேட்கும் குழந்தையின் ரியாக்ஷன்: மனங்களை வென்ற வீடியோ!