[X] Close
JUST IN
  • BREAKING-NEWS ராஜீவ்காந்தி கொலை குறித்து சீமான் பேசியது தொடர்பாக மாவட்ட தேர்தல் அதிகாரியிடம் விரிவான அறிக்கை கேட்டுள்ளார் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ
  • BREAKING-NEWS நீட் ஆள்மாறாட்ட வழக்கில் மாணவர் இர்பானின் காவலை அக்டோபர் 25 வரை நீட்டித்தது தேனி நீதிமன்றம்
  • BREAKING-NEWS நாளை முதல் காலவரையற்ற வேலைநிறுத்தம்: ஆவின் பால் டேங்கர் லாரி ஒப்பந்த உரிமையாளர்கள் அறிவிப்பு
  • BREAKING-NEWS இன்று முதல் 4 நாட்களுக்கு தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் அறிவிப்பு

மாங்காடு காமாட்சி அம்மன் கோயில் குடமுழுக்கு.. ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு

maangaadu-kamakshi-amman-temple-festival

திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள மாங்காடு காமாட்சி அம்மன் மற்றும் வைகுண்டப் பெருமாள் கோயில்களில் குடமுழுக்கு விமர்சையாக நடத்தப்பட்டது.

காஞ்சிபுரம் மாவட்டம், பூந்தமல்லியை அடுத்த மாங்காட்டில் காமாட்சி அம்மன் கோயில், வைகுண்டப் பெருமாள் வகையறா கோயில்கள் உள்ளன. சுமார் 1,500 ஆண்டுகளுக்கு முன் சோழர்களால் இக்கோயில் கருவறை, அர்த்த மண்டபம் கட்டப்பட்டன. பின்னர், விஜயநகரப் பேரரசு காலத்தில் மகா மண்டபமும், சபா மண்டபமும் கட்டப்பட்டன.

இந்த கோயிலில் கடந்த 2001-ஆம் ஆண்டில் குடமுழுக்கு நடத்தப்பட்டது. தற்போது 15 ஆண்டுகளுக்குப் பிறகு நடைபெறும்‌ குடமுழுக்கு நிகழ்வுக்காக ஒரு கோடியே 41 லட்ச ரூபாய் செலவில் ஏழுநிலை ராஜகோபுரம் புனரமைக்கப்பட்டது.

இந்நிலையில் இன்று காலை மாங்காடு காமாட்சி அம்மன் மற்றும் வைகுண்டப் பெருமாள் கோயில்களில் குடமுழுக்கு விமர்சையாக நடத்தப்பட்டது. குடமுழுக்‌கு நிகழ்ச்‌சியில் 31 குண்டங்கள் கொண்ட யாகை சாலைகள் அமைக்கப்பட்டு பூஜைகள் நடத்தப்பட்டன. இதில் ஆயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்டு பிரார்த்தனை செய்தனர்.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close