[X] Close
JUST IN
  • BREAKING-NEWS சந்திரயான்-2 விண்கலம் செப்.7 ஆம் தேதி நிலவில் தரையிறங்குகிறது - இஸ்ரோ
  • BREAKING-NEWS கர்நாடக அணைகளில் இருந்து காவிரியில் உபரிநீர் திறப்பு வினாடிக்கு 34,000 கன அடியாக அதிகரிப்பு
  • BREAKING-NEWS தமிழகத்தில் ஆவின் பால் விலை லிட்டருக்கு ரூ.6 உயர்வு - தமிழக அரசு
  • BREAKING-NEWS ஆகஸ்ட் 21 முதல் தனியார் தண்ணீர் லாரிகள் வேலை நிறுத்தம்
  • BREAKING-NEWS சாதி, மத அடையாளங்களுடன் மாணவர்கள் வந்தால் நடவடிக்கை- செங்கோட்டையன்

திருச்சி தொழிற்சாலை விபத்து... கைதான இருவருக்கு 15 நாள் நீதிமன்ற காவல்

19-killed-in-tamil-nadu-explosive-factory-blast

திருச்சி அருகே தொழிற்சாலை விபத்து தொடர்பாக கைது செய்யப்பட்ட இருவருக்கு 15 நாள் நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்பட்டனர்.

திருச்சி துறையூர் அருகே முருங்கப்பட்டி தொழிற்சாலையில் ஏற்பட்ட வெடிவிபத்தில் 19 பேரை உயிரிழந்தனர். இந்த விவகாரம் தொடர்பாக சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த வெடிவிபத்து தொடர்பாக மாவட்ட வருவாய் அலுவலர் தர்ப்பக ராஜ் விரிவான விசாரணை மேற்கொள்வார் என்று மாவட்ட ஆட்சியர் கே.எஸ்.பழனிச்சாமி உத்தரவு பிறப்பித்தார். இந்த வெடிவிபத்து எதனால் நடந்தது மற்றும் அதற்கான சூழல் குறித்து மாவட்ட வருவாய் அலுவலர் விசாரித்து அறிக்கை தாக்கல் செய்வார் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். இதற்கிடையே தொழிற்சாலையின் உரிமம் ரத்து செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. இவ்விபத்து தொடர்பாக கைதான ஆலையின் இயக்குநர் பிரகாசம், மேலாளர் ராஜகோபால் ஆகியோர் திருச்சி குற்றவியல் நீதிமன்ற நீதிபதி வீட்டில் ஆஜர்படுத்தப்பட்டு 15 நாள் காவலில் சிறையில் அடைக்கப்பட்டனர்.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close