[X] Close
JUST IN
  • BREAKING-NEWS தாக்குதல் பாதிப்புகளை சமாளித்து கச்சா எண்ணெய் உற்பத்தியை அதிகரித்து வருவதாக சவுதி அரேபியா தகவல்
  • BREAKING-NEWS விண்ணில் ஓரிடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு பாய்ந்து தாக்கும் அஸ்திரா ஏவுகணையை வெற்றிகரமாக சோதித்தது இந்தியா
  • BREAKING-NEWS பாகிஸ்தான் ஆக்கிரமித்துள்ள காஷ்மீர் இந்தியாவின் வசமாகும் - வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர்
  • BREAKING-NEWS தமிழகத்தில் போக்குவரத்து விதிமீறலுக்கான அபராத தொகை விரைவில் குறைக்கப்படும் - போக்குவரத்துத்துறை அமைச்சர்

ரூ.25 லட்சம் வங்கிப்பணம் கொள்ளை வழக்கு: முக்கிய குற்றவாளி சரண்

bank-money-robbery-case-main-culprit-surrender-before-court

சென்னை அடையாரில் வங்கிப் பணம் 25 லட்ச ரூபாய் கொள்ளை போன வழக்கில், முக்கிய குற்றவாளி நீதி‌மன்றத்தில் சரணடைந்தார்.

சென்னை சாஸ்திரி நகரில் உள்ள ஸ்டேட் பாங்க் ஆஃப் மைசூர் வங்கிக் கிளைக்கு சொந்தமான 25 லட்ச ரூபாய் கடந்த 25-ஆம் தேதி பல்லாவரத்தில் வைத்து வங்கி காசாளர் இளங்கோவனை மிரட்டி கத்தி முனையில் கொள்ளையடிக்கப்பட்டது. இதுதொடர்பாக சாஸ்திரிநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, இதுவரை 10 பேரை கைது செய்துள்ளனர். அவர்களிடம் இருந்து 6 லட்சத்து 70 ஆயிரம் ரூபாய் பணம் மீட்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், வ‌ழக்கில் முக்கிய‌ குற்றவாளியாக கருதப்பட்ட பொழிச்சலூரைச் சேர்ந்த தினேஷ் பாபு என்ற ராஜேஷ் தாம்பரம் நீதிமன்றத்தில் சரண் அடைந்துள்ளார். அவரை போலீசார் புழல் சிறையில் அடைத்துள்ளனர்.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close