[X] Close
JUST IN
  • BREAKING-NEWS ராஜீவ்காந்தி கொலை குறித்து சீமான் பேசியது தொடர்பாக மாவட்ட தேர்தல் அதிகாரியிடம் விரிவான அறிக்கை கேட்டுள்ளார் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ
  • BREAKING-NEWS நீட் ஆள்மாறாட்ட வழக்கில் மாணவர் இர்பானின் காவலை அக்டோபர் 25 வரை நீட்டித்தது தேனி நீதிமன்றம்
  • BREAKING-NEWS நாளை முதல் காலவரையற்ற வேலைநிறுத்தம்: ஆவின் பால் டேங்கர் லாரி ஒப்பந்த உரிமையாளர்கள் அறிவிப்பு
  • BREAKING-NEWS இன்று முதல் 4 நாட்களுக்கு தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் அறிவிப்பு

மதனிடம் விடியவிடிய போலீஸ் விசாரணை

police-investigates-mathan-the-whole-night

பல கோடி ரூபாய் பண மோசடி வழக்கில் கைது செய்யப்பட்ட மதனிடம் போலீசார் விடியவிடிய விசாரணை நடத்தினர்.

பல கோடி ரூபாய் பண மோசடி வழக்கில் கைதான மதனை 7 நாட்கள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றம் மத்திய குற்றப்பிரிவு போலீசாருக்கு நேற்று அனுமதி வழங்கியது.

இதனையடுத்து, மத்திய குற்றப்பிரிவு போலீசார் மதனிடம் விடிய விடிய விசாரணை நடத்தியுள்ளனர். அப்போது எங்கெல்லாம் சொத்துகள் வாங்கப்பட்டுள்ளன என்பது உள்ளிட்ட பல்வேறு கேள்விகளை சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் மதனிடம் கேட்டுள்ளனர். மேலும் மதனின் 2 செல்போன்களை பறிமுதல் செய்த போலீசார் அதிலிருந்த வாட்சப் உரையாடல்கள் குறித்தும் விசாரணையின் போது கேட்டறிந்ததாக தெரிகிறது.

முன்னதாக பண மோசடி வழக்கில் கடந்த மே மாதம் முதல் தலைமறைவான மதனை திருப்பூரில் அவரது தோழி வீட்டில் பதுங்கியிருந்தபோது காவல்துறையினர் கைது செய்தது குறிப்பிடத்தக்கது.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close