[X] Close
JUST IN
  • BREAKING-NEWS தமிழகம் மற்றும் புதுவையில் அடுத்த 3 நாட்களுக்கு பலத்த மழை பெய்ய வாய்ப்பு
  • BREAKING-NEWS நாங்குநேரி, விக்கிரவாண்டி பேரவை தொகுதிகளில் இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு காலை 7 மணிக்கு தொடங்கியது
  • BREAKING-NEWS தொடர் மழை காரணமாக கன்னியாகுமரி மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை; சிவகங்கை மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை
  • BREAKING-NEWS கவுரவ டாக்டர் பட்டம் பெற்றார் முதலமைச்சர் பழனிசாமி

அமெரிக்க தேர்தலில் வெற்றி பெற்ற தமிழர்களுக்கு மு.க.ஸ்டாலின் வாழ்த்து

mk-stalin-greetings-to-the-tamils-who-won-the-us-election

அமெரிக்க தேர்தலில் வெற்றி பெற்று, முதன்முறையா‌க நாடாளுமன்றத்துக்குள் நுழையும் தமிழர்களுக்கு எதிர்க்கட்சி தலைவர் மு.க. ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

சமீபத்தில் நடைபெற்ற அமெரிக்க தேர்தலில் குடியரசு கட்சி சார்பில் போட்டியிட்ட டொனால்ட் டிரம்ப் வெற்றி பெற்றார். இத்தேர்தலில் சிகாகோவிலிருந்து கிருஷ்ணமூர்த்தி, சியாட்டில் இருந்து பிரமிளா ஜெயபால் ஆகிய இரு தமிழர்கள் அமெரிக்க பிரதிநிதிகள் அவைக்கு தேர்வாகியுள்ளனர். இவர்களுக்கு வாழ்த்து தெரிவித்த மு.க.ஸ்டாலின் ‘வரலாற்று சிறப்புமிக்க வெற்றி பெற்று, அமெரிக்க நாடாளுமன்றத்தில் இதுவரை தமிழர்கள் இல்லையே என்ற குறையை போக்கியதோடு, உலக அரங்கில் தமிழர்களுக்கு மேலும் புகழை சேர்த்துள்ளனர்’ என பெருமிதம் தெரிவித்துள்ளார். மேலும், தமிழர்கள் தவிர பிரதிநிதிகள் அவைக்கு தேர்வான இந்தியர்கள் அமி பெரா, ரோஹித் கன்னா, கமலா ஹரீஸ் ஆகியோருக்கும் ஸ்டாலின் வாழ்த்து கூறியுள்ளார்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close