[X] Close
JUST IN
  • BREAKING-NEWS இரண்டாயிரம் ரூபாய் நோட்டுகள் அச்சிடுவதை நிறுத்தியது ரிசர்வ் வங்கி
  • BREAKING-NEWS ராஜீவ் காந்தி கொலை குறித்து சர்ச்சை பேச்சு.. சீமான் மீது வழக்குப்பதிவு
  • BREAKING-NEWS முதல்வர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு தேர்தல் களத்தில் நேருக்கு நேர் மோதத் தயாரா..? முதல்வருக்கு மு.க.ஸ்டாலின் சவால்
  • BREAKING-NEWS பிசிசிஐ தலைவராகிறார் கங்குலி... அனைத்து மாநில சங்கங்கள் ஏகமனதாக தேர்வு செய்கின்றனர்.
  • BREAKING-NEWS திருச்சி லலிதா ஜூவல்லரி நகைக் கொள்ளை வழக்கில் மேலும் 6 கிலோ நகை சிக்கியது
  • BREAKING-NEWS அயோத்தியில் டிசம்பர் 10-ஆம் தேதி வரை 144 தடை உத்தரவு

கூட்டுறவு சங்க உரத்திலும் கலப்படம்?... கலக்கத்தில் விவசாயி

co-operative-fertilizer-contamination

நாமக்கல் மாவட்டம் பள்ளிப்பாளையம் உழவர் தனி கூட்டுறவு சங்கத்தில் விற்பனை செய்யப்பட்ட உரமூட்டையில் மணல் கலந்திருந்ததாக புகார் எழுந்ததை அடுத்து அதிகாரிகள் ஆய்வு நடத்தினர்.

மேற்குத்தொட்டிப்பாளையத்தைச் சேர்ந்த விவசாயி தங்கவேல் கடந்த 2ஆம் தேதி உழவர் தனி கூட்டுறவு சங்கத்தில் இருந்து 50 கிலோ எடை கொண்ட என்பிகே(NPK) காம்ப்ளக்ஸ் உரம் 2 மூட்டை வாங்கியுள்ளார். மஞ்சள் மற்றும் கரும்பு பயிருக்கு தெளிப்பதற்காக உரத்தை தண்ணீரில் கலந்த போது 50 கிலோ மூட்டையில் 5 கிலோ மணல் ‌இருந்ததாக கூறப்படுகிறது. அதனை அடுத்து உதவி வேளாண் இயக்குநர், கூட்டுறவு சங்க அதிகாரிகள், உர நிறுவன அலுவலர்கள் விவசாயி தங்கவேலிடம் விசாரணை நடத்தினர். அவர் வைத்திருந்த உரத்தை ஆய்வு செய்த அதிகாரிகள், தண்ணீரில் கரையாத ரசாயனங்கள் மணல் போல் தேங்கியுள்ளதாக விளக்கமளித்தனர்.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close