[X] Close
JUST IN
  • BREAKING-NEWS நிலவின் சுற்றுவட்டப்பாதையை நெருங்குகிறது சந்திரயான் விண்கலம். காலை ஒன்பதரை மணியளவில் நிலவை சுற்றத் தொடங்கும் என இஸ்ரோ தகவல்
  • BREAKING-NEWS முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் 23ஆம் தேதி விசாரணைக்கு ஆஜராக அமலாக்கத்துறை சம்மன். ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் முன் ஜாமீன் கோரிய மனு மீது டெல்லி உயர்நீதிமன்றம் இன்று தீர்ப்பு
  • BREAKING-NEWS ஜம்மு காஷ்மீர் விவகாரம் தொடர்பாக 22ஆம் தேதி டெல்லியில் திமுக சார்பில் ஆர்ப்பாட்டம். அனைத்துக் கட்சி எம்.பி.க்கள் பங்கேற்பார்கள் என மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
  • BREAKING-NEWS 12 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு என வானிலை ஆய்வு மையம் தகவல்

மத்திய அமைச்சரை வரவேற்க வந்த யானை: பாகனுக்கு அபராதம்

penalties-for-mahout

மத்திய அமைச்சரை வரவேற்க யானை அழைத்துவரப்பட்டது தொடர்பாக யானை பாகன் மற்றும் உரிமையாளருக்கு அபராதம் விதித்து சென்னை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கடந்த 5ஆம் தேதி மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் கலந்து கொண்ட தனியார் நிகழ்ச்சியில் அவரை வரவேற்பதற்காக திருச்சியிலிருந்து சுமா என்ற பெண் யானை கொண்டுவரப்பட்டது. அதற்கு முறையான உணவு, தண்ணீர் கொடுக்கவில்லை என கிடைத்த தகவலின் பேரில் கால்நடை துயர் தடுப்பு அதிகாரிகள் யானையை பறிமுதல் செய்ததோடு யானையின் உரிமையாளர் மற்றும் பாகன் மீது மூன்று பிரிவுகளில் வழக்கு பதிவு செய்தனர்.

அதுதொடர்பான வழக்கு இன்று எழும்பூர் நடமாடும் நீதிமன்றத்திற்கு விசாரணைக்கு வந்தது. அப்போது, யானை பாகன் அண்ணாமலை மற்றும் உரிமையாளர் சேகர் ஆகியோர் நீதிமன்றத்தில் ஆஜராகினர். கால்நடை துயர் தடுப்பு ஆய்வாளர் சந்திரசேகர் ஆஜராகி, விலங்குகள் நல வாரியத்திடம் அனுமதி பெறாமல் யானை கொண்டு வரப்பட்டிருப்பதாகவும், கோயில் நிகழ்ச்சிக்கு என்று கூறி அ‌ழைத்துவரப்பட்டு வரவேற்பு நிகழ்ச்சியில் பயன்படுத்தியதாகவும் தெரிவித்தார். இதை ஏற்று யானைப் பாகன் மற்றும் உரிமையாளருக்கு தலா 7 ஆயிரத்து 700 ரூபாய் அபராதம் விதித்த நீதிபதி, அடுத்தமுறை அனுமதிபெறாமல் யானை அழைத்து‌வரப்பட்டால், வண்டலூர் பூங்காவில் ஒப்படைக்கப்படுமென எச்சரிக்கை விடுத்தார்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close