[X] Close
JUST IN
  • BREAKING-NEWS தமிழக சட்டப்பேரவைக் கூட்டம் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு
  • BREAKING-NEWS ஹைட்ரோகார்பன் திட்டத்தால் பாலைவனம் சோலைவனம் ஆகும்; சோலைவனம் பாலைவனம் ஆகாது - தமிழிசை
  • BREAKING-NEWS 6 மாநிலங்களுக்கு ஆளுநர்கள் நியமனம் - ஆனந்திபென் பட்டேல் உ.பிக்கு மாற்றம்
  • BREAKING-NEWS டெல்லி முன்னாள் முதல்வர் ஷீலா தீக்ஷித் காலமானார்

அரசு ஊழியர்களுக்கு 9 மாத பேறுகால விடுப்பு.. அரசாணை வெளியீடு

nine-months-maternity-leave-for-woemn-go-released

தமிழக அரசு ஊழியர்களின் 9 மாத பேறுகால விடுப்புக்கான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

கடந்த சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி, தேர்தல் அறிக்கை வெளியிட்ட அதிமுக, ஆட்சிக்கு வந்தால் அரசு ஊழியர்களின் பேறுகால விடுப்பு 6 மாதத்தில் இருந்து 9 மாத காலமாக உயர்த்தப்படும் என தெரிவித்திருந்தது.

அதன்படி தேர்தலில் வெற்றி பெற்று அதிமுக மீண்டும் ஆட்சிக்கு வந்தது. இதனைத்தொடர்ந்து, கடந்த செப்டம்பர் மாதத்தில் நடைபெற்ற பட்ஜெட் கூட்டத்தின் போது, தமிழகத்தில் அரசுப் பணியில் உள்ள பெண்களின் மகப்பேறு விடுமுறையை 6 மாதத்தில் இருந்து 9 மாதமாக உயர்த்தி தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா அறிவிப்பு வெளியிட்டிருந்தார்.

இந்நிலையில் இதற்கான அரசாணை இன்று வெளியிடப்பட்டுள்ளது. இது குறித்து தமிழக அரசின் பணியாளர் மற்றும் நிர்வாகச் சீர்திருத்தத்துறை செயலர் சுவர்ணா வெளியிட்டுள்ள அறிவிப்பில், பேறுகால விடுப்பு 180 நாட்களிலிருந்து 270 நாட்களாக உயர்த்தப்படுவதாகக் கூறப்பட்டுள்ளது.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close