[X] Close
JUST IN
  • BREAKING-NEWS ஏ.சி.சண்முகம், கதிர் ஆனந்த் வேட்புமனுக்கள் நிறுத்திவைப்பு
  • BREAKING-NEWS திரிணாமுல், சிபிஐ, தேசியவாத காங்கிரஸ் கட்சிகளுக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்
  • BREAKING-NEWS இன்ஸ்டாகிராம் குறைபாட்டை கண்டுபிடித்த இளைஞருக்கு 20 லட்சம் பரிசு
  • BREAKING-NEWS நெக்ஸ்ட் தேர்வுக்கு எதிர்ப்பு - திமுக, காங். எம்பிக்கள் ஆர்பாட்டம்
  • BREAKING-NEWS கார் விபத்து: டிவி நடிகை உடல் நசுங்கி பலி!
  • BREAKING-NEWS இரண்டாவது நாளாக கர்நாடக சட்டசபை இன்று தொடங்கியது

ஏடிஎம் கார்டு தகவல்கள் திருடப்பட்ட விவகாரம்: நாடாளுமன்ற குழு விசாரணை

parliamentary-team-inquiry-atm-theft-case

டெபிட் கார்டு விவரங்கள் திருடப்பட்டதாக எழுந்த புகார் குறித்து நாடாளுமன்ற குழு விசாரணை நடத்துகிறது.

இதுகுறித்த விசாரணை நிதித் துறைக்கான நாடாளுமன்ற நிலைக் குழு தலைவர் வீரப்ப மொய்லி தலைமையில் இன்னும் ஒரு வாரத்தில் நடைபெற உள்ளது. இந்த விசாரணையில் பதிலளிக்க வருமாறு அமைச்சக அதிகாரிகள் மற்றும் வங்கி அதிகாரிகளுக்கும் அழைப்பு அனுப்பப்பட்டுள்ளது.

32 லட்சம் பேரின் ஏடிஎம் அட்டை தகவல் திருட்டு விவகாரத்தில் 641 பேரிடம் ஒரு கோடியே 30 லட்சம் ரூபாய் மோசடி நடைபெற்றுள்ளது. இவ்விவகாரம் தொடர்பாக ரிசர்வ் வங்கியும் தனியாக ஆலோசனை நடத்தி வருகிறது.

எஸ்பிஐ உள்ளிட்ட பல்வேறு வங்கிகளின் 32 லட்சம் வாடிக்கையாளர்களது டெபிட் கார்டுகள் தகவல்கள் திருடப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதில் 26 லட்சம் கார்டுகள் விசா மற்றும் மாஸ்டர் கார்டு வகைகளை சேர்ந்தவை என்றும், மீதமுள்ள 6 லட்சம் கார்டுகள் ரூபே கார்டுகள் என்றும் கூறப்படுகின்றது.

ரிசர்வ் வங்கியின் உத்தரவின் பேரில், எஸ்பிஐ வங்கி, ஹெச்டிஎப்சி, ஐசிஐசிஐ, யெஸ் வங்கி, ஆக்ஸிஸ் வங்கி போன்ற வங்கிகளின் டெபிட் கார்டுகள் திரும்பப் பெறப்பட்டன.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close