[X] Close
JUST IN
  • BREAKING-NEWS இ-சிகரெட் விற்பனை, உற்பத்தி, ஏற்றுமதி இறக்குமதிக்கு தடை - மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவு
  • BREAKING-NEWS தாய்மொழிக்கு பதிலாக இந்தியை கற்க வேண்டும் என கூறவில்லை - மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா
  • BREAKING-NEWS இந்தி திணிப்புக்கு எதிராக நாளை திமுக நடத்தவிருந்த போராட்டம் ஒத்திவைப்பு. ஆளுநரின் உறுதிமொழியை ஏற்று முடிவு எடுக்கப்பட்டதாக ஸ்டாலின் அறிவிப்பு
  • BREAKING-NEWS சென்னை உள்பட மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இடிமின்னலுடன் கனமழை. வளிமண்டல மேலடுக்குச் சுழற்சி காரணமாக மழை நீடிக்கும் எனத் தகவல்

திருச்செந்தூரில் சூரசம்ஹாரம்.. லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர்

soora-samhaaram-in-tiruchendur

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் கந்தசஷ்டி திருவிழாவின் முக்கிய நிகழ்வான சூரசம்ஹாரம் இன்று மாலை நடைபெறுகிறது. இதனை காண லட்சக்கணக்கான பக்தர்கள் கடற்கரையில் குவிந்துள்ளனர்.

முருக பெருமானின் அறுபடை வீடுகளின் 2–ம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் கந்தசஷ்டி திருவிழா கடந்த 31–ந் தேதி தொடங்கியது. விழாவின் முக்கிய நிகழ்வாக, இன்று மாலை 4.30 மணியளில் கடற்கரையில் சூரசம்ஹாரம் நடைபெறுகிறது.

சூரசம்ஹாரத்தை நேரடியாக காண தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், வெளி மாநிலங்கள், வெளி நாடுகளில் இருந்தும் பல லட்சக்கணக்கான பக்தர்கள் திருச்செந்தூருக்கு வந்த வண்ணம் உள்ளனர். கிட்டத்தட்ட 5 முதல் 10 லட்சம் வரை பக்தர்கள் திருச்செந்தூருக்கு வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. பக்தர்கள் திருச்செந்தூருக்கு சிரமின்றி வந்து செல்ல ஏதுவாகவும், கூட்ட நெரிசலை கட்டுப்படுத்தும் விதமாகவும் சிறப்பு பேருந்துகளும் இயக்கப்படுகின்றன. தற்காலிக பேருந்து நிலையங்களும் அமைக்கப்பட்டுள்ளன.

லட்சக்கணக்கான பக்தர்கள் கூடுவதால் அவர்களுக்கு தேவையான சிறப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. மேலும் பாதுகாப்புப் பணியில் 1,500 போலீசார் ஈடுபட்டுள்ளனர். முதல்முறையாக ஆளில்லா விமானம் மூலமும் கண்காணிப்பு பணிகள் நடைபெற்று வருகிறது.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close