[X] Close
JUST IN
  • BREAKING-NEWS தென்னாப்ரிக்காவுக்கு எதிரான 3வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் சதமடித்தார் ரோகித் ஷர்மா
  • BREAKING-NEWS காங்கிரஸ் அரசு முடக்கி வைத்திருந்த தேஜாஸ் போர் விமானம் பாதுகாப்பு படையில் சேவையாற்ற தயாராக உள்ளது - பிரதமர் மோடி
  • BREAKING-NEWS நாங்குநேரியில் பணப்பட்டுவாடா செய்ததாக இதுவரை 6 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன - நெல்லை ஆட்சியர்
  • BREAKING-NEWS தமிழகம், புதுச்சேரியில் 4 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு - சென்னை வானிலை ஆய்வு மையம்
  • BREAKING-NEWS திருச்சி பஞ்சாப் நேஷனல் வங்கியில் கொள்ளையடித்த நகைகளை முருகன் கும்பல் உருக்கி விற்றது அம்பலம்

வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி.... தமிழகத்தில் மழை நீடிக்கும்

heavy-chennai-rains-make-a-comeback

அந்தமான் கடல் பகுதியில் நிலைகொண்டு இருந்த காற்றழுத்தம், தாழ்வுப்பகுதியாக மாறி தென்கிழக்கு வங்க கடலில் நிலைகொண்டு உள்ளது.

இதன் காரணமாக, வட தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும், தென் தமிழகத்தில் அநேக இடங்களிலும் பரவலாக மழை பெய்ய வாய்ப்பு இருக்கிறது சென்னையைப் பொருத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். ஒருசில இடங்களில் மழையோ, இடியுடன் கூடிய மழையோ பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதனிடையே வடகிழக்கு பருவ மழையின் காரணமாக வடகடலோர தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அனேக இடங்களில் நேற்று இரவு முதல் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. ‌இந்த நிலையில் தென்கிழக்கு அரபிக்கடலில் வளிமண்டலத்தில் மேலடுக்கு சூழற்சி ஏற்பட்டுள்ளதாக வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. அதன்கார‌ணமாக, கேரளா மற்றும் தென் தமிழகத்தில் தொடர்ந்து மழைபெய்து வருவதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக பாபநாசத்தில் 8 செ.மீ. மழை பதிவாகி உள்ளது. தூத்துக்குடி, தென்காசி, ஆர்.எஸ். மங்கலம் ஆகிய இடங்களில் தலா 5 செ.மீ. மழையும், கரூர், சிவகிரி, காமாட்சிபுரம் ஆகிய இடங்களில் தலா 4 செ.மீ. மழையும் பதிவாகியுள்ளது.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close