[X] Close
JUST IN
  • BREAKING-NEWS தண்ணீர் பிரச்னைக்காக மாவட்டந்தோறும் ஜூன் 22 முதல் திமுக கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் - திமுக மாவட்டச் செயலாளர்களுக்கு மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தல்
  • BREAKING-NEWS வாகன ஓட்டு‌நர் உ‌ரிமம் பெறுவதற்கான குறைந்த‌பட்ச கல்வி தகுதியை அடியோடு நீக்கம் செய்ய மத்திய அரசு முடிவு ‌செய்துள்ளதாக தகவல்
  • BREAKING-NEWS ஆந்திர போலீஸாருக்கு இன்று முதல் வார விடுமுறை அறிவித்தார் முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி
  • BREAKING-NEWS மக்களவை சபாநாயகராக பாஜவை சேர்ந்த ஓம் பிர்லா எம்.பி. போட்டியின்றி ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார்
  • BREAKING-NEWS நடிகர் சங்கத் தேர்தலை நிறுத்துமாறு தென்சென்னை மாவட்ட சங்கங்களின் பதிவாளர் உத்தரவு
  • BREAKING-NEWS தேர்தல் தோல்வியை அடுத்து கர்நாடக மாநில காங்கிரஸ் கமிட்டியை கலைத்தது காங்கிரஸ் கட்சி

திமுக-வின் அனைத்துக் கட்சி கூட்டத்தில் தமாகா பங்கேற்கும்: ஜி.கே.வாசன் அறிவிப்பு

tmc-will-participate-in-dmk-all-party-meeting-gk-vasan

காவிரி விவகாரத்தில் திமுக நடத்தும் அனைத்துக் கட்சி கூட்டத்தில் தமிழ் மாநில காங்கிரஸ் பங்கேற்கும் என அதன் தலைவர் ஜி.கே.வாசன் அறிவித்துள்ளார்.

காவிரி விவகாரத்தில் மத்திய அரசின் செயல்பாட்டை கண்டித்து திமுக சார்பில் தஞ்சையில் கடந்த 7-ஆம் தேதி உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது. இதேபோல்,காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க நடவடிக்கை எடுக்குமாறு திமுக எம்.பி.க்கள், குடியரசுத் தலைவரையும் நேரில் சந்தித்து முறையிட்டனர்.

இதனையடுத்து, காவிரி விவகாரத்தில் வரும் 25-ஆம் தேதி அனைத்துக்கட்சி கூட்டத்திற்கு திமுக அழைப்பு விடுத்துள்ளது. இது தொடர்பாக திமுக பொருளாளரும், சட்டப்பேரவை எதிர்க்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின், கட்சிகளுக்கு தனித்தனியே கடிதம் அனுப்பியுள்ளார்.

இந்நிலையில் திமுக நடத்தும் அனைத்துக் கட்சி கூட்டத்தில் தமிழ் மாநில காங்கிரஸ் பங்கேற்கும் என அதன் தலைவர் ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார். தமாகா சார்பில் தானும், முக்கியத் தலைவர்களும் பங்கேற்க உள்ளதாக ஜி.கே.வாசன் கூறியுள்ளர். காவிரி விவகாரத்தில், தமிழக அரசு அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்டாதது வருத்தமளிப்பதாகவும், திமுக-வின் அனைத்துக் கட்சி கூட்டத்தை அரசியல் வேறுபாடுகளை கடந்து பொதுப் பிரச்னையாக கருதுவதாகவும் அவர் கூறியுள்ளார்.

இதனிடையே, தமிழகத்தில் தஞ்சாவூர், அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம் ஆகிய தொகுதிகளில் நடைபெறும் தேர்தலில், தமிழ் மாநில காங்கிரஸ் போட்டியிடுவது குறித்து நாளை மறுநாள் அறிவிப்பு வெளியிடப்படும் எனவும் ஜி.கே.வாசன் கூறியுள்ளார்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close