[X] Close
JUST IN
  • BREAKING-NEWS நீட் தேர்வு ஆள்மாறாட்ட வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டுள்ளது
  • BREAKING-NEWS தென்னாப்பிரிக்க வீரரை இடித்த விவகாரத்தில் விராட் கோலிக்கு ஐசிசி கண்டனம்
  • BREAKING-NEWS சென்னையில் டெங்கு காய்ச்சல் பாதிப்பால் 6 வயது சிறுமி உயிரிழப்பு
  • BREAKING-NEWS கோரிக்கைகளை பரிசீலிப்பதாக நிதித்துறை செயலாளர் கூறியதால் வங்கி அதிகாரிகள் வேலை நிறுத்தம் ஒத்திவைப்பு

முதல்வர் ஜெயலலிதாவின் துறைகள் நிதியமைச்சருக்கு ஒதுக்கீடு: திமுக வரவேற்பு

cm-jayalalithaa-portfolio-allocated-for-o-pannerselvam-dmk-welcome

உடல்நிலைக் குறைவு காரணமாக கடந்த செப்டம்பர் மாதம் 22-ஆம் தேதி முதல் சென்னை அப்போலோ மருத்துவமனையில் முதலமைச்சர் ஜெயலலிதா சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்நிலையில் முதலமைச்சர் ஜெயலலிதா கவனித்துவந்த துறைகள் நிதியமைச்சர் ஒ.பன்னீர்செல்வத்துக்கு ஒதுக்கப்படுவதாக தமிழக ஆளுநர் வித்தியாசாகர் ராவ் நேற்று அறிவிப்பு வெளியிட்டார்.

இது குறித்து கருத்து தெரிவித்த மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், நிர்வாக வசதிக்காகவே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருக்கும் என்றும் அரசியல் அழுத்தம் இதற்கு காரணம் இல்லை எனவும் தெரிவித்துள்ளார்.

மு.க.ஸ்டாலின் வரவேற்பு

இலாகாக்கள் ஒ.பன்னீர்செல்வத்திடம் ஒப்படைக்கப்பட்டிருப்பதை எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் வரவேற்றுள்ளார்.

இது குறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில் முதலமைச்சர் உடல் நலம் பெற்று திரும்பும வரை தமிழகத்தின் நலன் கருதி பொறுப்பு முதலமைச்சர் ஒருவரையோ அல்லது அவருக்கு அடுத்துள்ள மூத்த அமைச்சரையோ நிர்வாகப் ‌பணிகளை கவனிக்க நியமிக்க வேண்டும்‌ என திமுக தலைவர் கருணாநிதியும் தானும் தொ‌டர்ந்து கோரிக்கைவிடுத்து வந்ததாக குறிப்பிட்டுள்ளார்.

தமிழகத்தை காவிரி, முல்லைப்பெரியாறு, சிறுவாணி உள்ளிட்ட பிரச்னைகள் சூழ்ந்திருப்பதாகவும், மாநிலத்தின் பல்வேறு நிர்வாகப் பிரச்னைகளை கலந்து ஆலோசிக்க பொறுப்புள்ள அமைச்சரவை இருக்க வேண்டுமென கூறியுள்ள ஸ்டாலின், முக்கிய முடிவுகளை எடுக்க அந்த அமைச்சரவைக்கு ஒரு தலைவர் தேவை என்று குறிப்பிட்டுள்ளார். இந்த நிலையில், மாநில நிர்வாக நலன் கருதி தமிழக ஆளுநர் எடுத்துள்ள நடவடிக்கையை வரவேற்பதாக ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

பொறுப்பு முதலமைச்சர் அல்லது மாற்று ஏற்பாடு என்பது குறித்து அரசியல் கட்சிகளின் தலைவர்கள் மாறுப்பட்ட கருத்துகளை தெரிவித்து வந்த நிலையில் ஆளுநரில் அறிவிப்பு விவாதங்களுக்கு முற்றுப்புள்ளியை வைத்துள்ளதாக அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close