[X] Close
JUST IN
  • BREAKING-NEWS தென்னாப்ரிக்காவுக்கு எதிரான 3வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் சதமடித்தார் ரோகித் ஷர்மா
  • BREAKING-NEWS காங்கிரஸ் அரசு முடக்கி வைத்திருந்த தேஜாஸ் போர் விமானம் பாதுகாப்பு படையில் சேவையாற்ற தயாராக உள்ளது - பிரதமர் மோடி
  • BREAKING-NEWS நாங்குநேரியில் பணப்பட்டுவாடா செய்ததாக இதுவரை 6 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன - நெல்லை ஆட்சியர்
  • BREAKING-NEWS தமிழகம், புதுச்சேரியில் 4 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு - சென்னை வானிலை ஆய்வு மையம்
  • BREAKING-NEWS திருச்சி பஞ்சாப் நேஷனல் வங்கியில் கொள்ளையடித்த நகைகளை முருகன் கும்பல் உருக்கி விற்றது அம்பலம்

தமிழகத்திற்கு தண்ணீர் திறக்கப்பட்டது அநீதி: கன்னட ரக்ஷன வேதிகே அமைப்பினர் போராட்டம்

karnatka-protest-against-water-released-from-cauvery

காவிரியில் தண்ணீர் திறக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழக எல்லையருகே கன்னட அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மாண்டியாவிலிருந்து பேரணியாக வந்த கன்னட ரக்ஷன வேதிகே அமைப்பினர், தமிழக எல்லையை அடுத்துள்ள அத்திப்பள்ளியில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர், தமிழக எல்லையான ஜூஜூவாடி பகுதிக்கு வந்த கன்னட அமைப்பினர், சாலை மறியலில் ஈடுபட்டனர்.

அப்போது, காவிரி தங்களுக்கே சொந்தமானது என்றும் தமிழகத்திற்கு தண்ணீர் திறக்கப்பட்டது அநீதி என்றும் கன்னட ரக்ஷன வேதிகே அமைப்பினர் முழக்கமிட்டனர்.

இந்த போராட்டத்தில் தமிழக-கர்நாடக எல்லையில் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது. இதையடுத்து, போராட்டத்தில் ஈடுபட்ட கன்னட அமைப்பினரை கர்நாடக காவல்துறையினர் கைது செய்து அழைத்துச் சென்றனர்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close