[X] Close
JUST IN
  • BREAKING-NEWS அத்திவரதரை தரிசிப்பதற்காக வரிசையில் காத்திருந்த பக்தர்களில் 3 பேர் மூச்சுத்திணறல் ஏற்பட்டு உயிரிழப்பு
  • BREAKING-NEWS தேசத் துரோக வழக்கில் வைகோவுக்கு விதிக்கப்பட்ட ஓராண்டு சிறை தண்டனை நிறுத்திவைப்பு
  • BREAKING-NEWS வேலூர் மக்களவை தேர்தலில் மக்கள்நீதிமய்யம் போட்டியிடவில்லை - பொதுச்செயலாளர் அருணாச்சலம்
  • BREAKING-NEWS வேலூரில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு ஜூலை 24ஆம் தேதி விடுமுறை; வேலூர் மக்களவை தேர்தலில் பணியாற்றவுள்ள ஆசிரியர்களுக்கு 2ஆம் கட்ட பயிற்சி நடைபெறுகிறது; விடுமுறையை ஈடுசெய்யும் வகையில் வரும் 20ஆம் தேதி பள்ளிகள் இயங்கும் - மாவட்ட ஆட்சியர்
  • BREAKING-NEWS 7 பேர் விடுதலை விவகாரம்: நளினி தொடர்ந்த வழக்கு தள்ளுபடி
  • BREAKING-NEWS சென்னை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த சரவணபவன் அதிபர் ராஜகோபால் காலமானார்

தெலங்கானாவைத் தொடர்ந்து ஆந்திராவிலும் சிந்துவுக்கு பாராட்டு விழா

pv-sindhu-s-victory-rally-in-vijayawada

தெலங்கானா மாநிலத்தைச் தொடர்ந்து ஆந்திர அரசு சார்பிலும் பி.வி. சிந்துவுக்கு பாராட்டு விழா நடைபெற்று வருகிறது.

இந்த விழாவில் பங்கேற்பதற்காக பி.வி. சிந்துவும், அவரது பயிற்சியாளர் கோபிசந்தும், ஹைதராபாத்தில் இருந்து சிறப்பு விமானம் மூலம் விஜயவாடா சென்றனர். பின்னர் அங்கிருந்து திறந்த வாகனத்தில், விஜயவாடாவில் உள்ள இந்திரா காந்தி மைதானத்திற்கு ஊர்வலமாக அழைத்துச் செல்லப்பட்டனர். பள்ளி மற்றும் கல்லூரி மாணவ மாணவிகள் என ஏராளமானோர், சிந்துவுக்கு உற்சாக வரவேற்பு கொடுத்தனர்.

ஒலிம்பிக்கில் வெள்ளிப் பதக்கம் வென்று தேசத்திற்கு பெருமை சேர்த்த பி.வி. சிந்துவை வரவேற்கும் வகையில், வழிநெடுகிலும் பதாதைகள் அமைக்கப்பட்டுள்ளன. பாராட்டு விழா நடைபெறவுள்ள இந்திரா காந்தி மைதானத்தில் பாரம்பரிய கலைநிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு உள்ளிட்ட தலைவர்கள் பாராட்டு விழாவில் பங்கேற்கவுள்ளனர். ஒலிம்பிக் பேட்மிண்டன் போட்டியில்
வெள்ளிப் பதக்கம் வென்ற சிந்துவுக்கு, ஆந்திர அரசு ஏற்கனவே 3 கோடி ரூபாய் பரிசுத் தொகை அறிவித்துள்ளது. தெலங்கானா, ஆந்திரா ஆகிய இரு மாநில அரசுகளும், சிந்துவுக்கு அரசு வேலை அளிப்பதாகவும் அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close