[X] Close
JUST IN
  • BREAKING-NEWS பிரிட்டனில் மீண்டும் போரிஸ் ஜான்சன் ஆட்சியமைக்க வாய்ப்பு
  • BREAKING-NEWS விழுப்புரத்தில் மூன்று குழந்தைகளை கொலை செய்து தந்தையும், தாயும் தற்கொலை
  • BREAKING-NEWS குடியரசுத் தலைவரின் ஒப்புதலையடுத்து குடியுரிமை சட்டத் திருத்த மசோதா அமலுக்கு வந்தது

பெரும்பகை கொண்ட நாடுகளை சேர்ந்தவர்கள் ரியோவில் செல்ஃபி!

popular-rio-selfies

விளையாட்டு என்பது பகைவர்களை ஒன்றிணைக்கும் வல்லமை கொண்டது என்பதற்கு உதாரணமான நிகழ்வு ரியோ ஒலிம்பிக்கில் நடந்திருக்கிறது. தென்கொரியாவும் வடகொரியாவும் உலகிலேயே பெரும்பகை கொண்ட நாடுகளாகச் சித்திரிக்கப்படும் நிலையில், அவ்விரு நாடுகளைச் சேர்ந்த இருவர் ஒன்றாகச் சேர்ந்து செல்ஃபி எடுத்துக் கொண்டிருக்கிறார்கள்.

ரியோ ஒலிம்பிக்கில் பங்கேற்கும் வடகொரிய வீராங்கனை ஹாங், தென்கொரியாவைச் சேர்ந்த ஒரு பெண்ணுடன் சேர்ந்து எடுத்துக் கொண்ட புகைப்படம் தற்போது இணையம் முழுக்கப் பரவியிருக்கிறது. வடகொரியாவின் மற்றொரு எதிரி நாடான அமெரிக்காவைச் சேர்ந்து ஜிம்னாஸ்டிக் வீராங்கனையான சிமோன் பைல்ஸை, ஹாங் தழுவிக் கொண்ட புகைப்படமும் அதிகமாகப் பகிரப்பட்டு வருகிறது.

பரம வைரிகள் சேர்ந்துவிட்டதாக சிலர் கருத்துகளைக் கூறும் நிலையில், வடகொரிய வீராங்கனைக்கு என்ன நேருமோ என்று சிலர் கவலை தெரிவித்திருக்கிறார்கள். ஏனெனில் போட்டிகளில் தோற்கும் வீரர்களுக்கேகூட வட கொரியா தண்டனை அளிக்கும் என்ற கருத்து பரவலாக இருக்கிறது.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close